”நான் என்னிக்கு எல்லாரோடவும் சேர்ந்து உட்கார்ந்து சாப்பிட்டிருக்கேன், எனக்கு தனிமைதான் பிடிக்கும் ஏதோ வெளியிடங்கள்ல எல்லார்கூடவும் சாப்பிட வேண்டிய கட்டாயம் அதனால சாப்பிட்டேன், எனக்கு தனியா கொண்டு வந்து கொடுத்துடு, அப்படியே என் அப்பா அம்மாவுக்கும் அவங்க ரூம்ல கொண்டு போய் வைச்சிடு” என கட்டளையிட அவளோ பேசமுடியாமல் வாயடைத்துப் போய் தலையை மட்டும் பூம்பூம் மாடு போல ஆட்டிவைத்தாள்.
வெளியே சாப்பிடும் இடத்தில் ஒரே சிரிப்பு சத்தம் வீரசிங்கம் வேங்கையன் சாப்பிட அமர அவர்களுக்கு மங்களமும் மஹதியும் பரிமாறினார்கள், வீரசிங்கமோ மஹதியை முறைக்க அதற்காக அவள் அசரவில்லை, தைரியமாக இருந்தாள், அதுவே அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. வேங்கையனோ
”எங்களுக்கு பரிமாறினது போதும் ரெண்டு பேரும் உட்கார்ந்து சாப்பிடுங்க” என சொல்ல மங்களமோ
”ஆகட்டும்பா நீங்க சாப்பிட்டு முடிங்க நாங்க அப்புறம் சாப்பிடுறோம்“
”அப்புறம் எப்ப சாப்பிடுவீங்க, இப்பவே நேரமாயிடுச்சி வாங்க” என அழைக்க மஹதி தயங்கி வீரசிங்கம் என்ன நினைப்பாரோ என நினைத்து கலங்க அதை புரிந்துக் கொண்ட வீரசிங்கமும் தொண்டையை கனைத்துவிட்டு
”ஆஆ வேங்கை சொல்றது சரிதான், இப்பவே நேரமாயிடுச்சி வாங்க சாப்பிடுவீங்க, ஒண்ணா சாப்பிடறதால ஒண்ணும் குறைஞ்சிட மாட்டோம், நாங்க மட்டும் முதல்ல சாப்பிடறதால பெரியாளாயிட மாட்டோம், குடும்பத்தோட சாப்பிடறப்பதான் சாப்பாடு இன்னும் ருசியா இருக்கும்” என சொல்ல மஹதி சிரிப்புடன் சட்டென வேங்கையன் பக்கத்தில் சாப்பிட அமர்ந்தாள், மங்களமும் தன் கணவரின் பக்கத்தில் அமர்ந்தார்.
வேங்கையன் மஹதிக்காக பரிமாறினான், மங்களத்திற்கு வீரசிங்கம் பரிமாறினார். அனைவருமே கதைகளை பேசிக் கொண்டு சிரித்தபடியே சாப்பிடலானார்கள். அந்த காட்சியைக்கண்ட ஜானகிக்கு எரிச்சலாக இருந்தது