(Reading time: 7 - 14 minutes)
Oru kili uruguthu
Oru kili uruguthu

“உங்களை பிரின்ஸ்ன்னு எல்லோரும் கூப்பிடுறது பிடிக்கும்னா அதை சொல்லுங்க. நான் உங்க ஆசையை நிறைவேத்தி வைக்கிறேன். அதுக்காக என்னை இப்படி ஃபேரி டேல் ஹீரோயின் பேரை வச்சு எல்லாம் கூப்பிடாதீங்க!” சக்தி சாந்ததுரை பக்கம் பார்க்காமலே பதில் சொன்னாள்.

  

“அது ஏன் சின்ட்ரெல்லா மேல உங்களுக்கு அவ்வளவு கோபம்?”

  

சக்தி திரும்பி அவளுடைய டீஷர்ட் பொன்மொழியை சுட்டிக் காட்டினாள். Sometimes you have to write your own DAMN fairy tale. அதைப் படித்து சாந்ததுரை சிரித்தான்!

  

“இதிலேயும் நீங்க அதிரடி ராணி தான். உங்களுக்கு லேடி ராம்போ ங்குற பேரு தான் சரியா செட் ஆகும் சக்தி. அப்படியே கூப்பிடுறேன்.” சாந்ததுரை சொன்னதை முழுவதுமாக கூட கவனிக்காமல் மும்முரமாக எதிரே இருந்த போர்டை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள் சக்தி.

  

🌼🌸❀✿🌷

   

சத்யா தெளிவில்லாத மன நிலையில் இருந்தாள். அஹல்யா பற்றி பிரணய் வழியாக கேள்விப்பட்ட விபரங்கள் அவளை ரொம்பவும் பாதித்திருந்தது. இதுப் போன்ற விஷயங்களை பேப்பரில் படித்து இருக்கிறாள், திரைப்படங்களில் பார்த்திருக்கிறாள். தெரிந்த ஒருவருக்கு அப்படி ஒரு கொடுமை நடந்தது தெரியும் போது அதன் இன்டன்சிட்டி ரொம்பவும் அதிகமாக இருந்தது!

  

அவளுக்கு எப்போதுமே அஹல்யாவை பிடிக்கும். இப்போது அஹல்யாவுடைய அன்-அஃபிஷியல் கேர் டேக்கர் ஆக தனக்குத் தானே ஒரு பதவியை கொடுத்துக் கொண்டாள்!

  

வேண்டாத வேலைகளை இழுத்துப் போட்டு செய்துப் பார்த்தாள்! டிவி, புக் என்று ஏதேதோ முயற்சி செய்தாள்! ஆனாலும் கேள்விப்பட்ட அந்த செய்தியின் தாக்கம் சத்யாவை விட்டுப் போக மாட்டேன் என்று அடம் பிடித்தது. அவளுக்கே இப்படி என்றால், அஹல்யா ஏன் மும்பை பற்றி பேச மறுக்கிறாள் என்று இன்னொருமுறை கேட்பதே அபத்தம்!

  

தென்றல்வாணனிடம் புலம்ப முடிந்தாலாவது பரவாயில்லை! கணவனே என்றாலும்

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.