“ஐ ஸீ! இப்போ புரியுது எப்படி அங்கே சில பேருக்கு குறைவா பணம் வாங்கிட்டு ட்ரீட்மென்ட் கொடுக்குறாங்கன்னு! கொடுக்க முடியாதவங்களுக்கும் சேர்த்து அந்த ஃபைவ் ஸ்டார் மக்கள் கிட்ட வாங்கிடுவாங்க போலருக்கு!”
“இருக்கலாம். ஸ்டில், டாக்டர் பிரசாத்தோட ஹார்ட் வொர்க் என்னை மலைச்சு போக வச்சிருக்கு. மெயின் சிட்டியா இல்லாத ஒரு ஊருல இப்படி நல்ல ஃபேசிலிட்டீஸோட ஒரு ஹாஸ்பிட்டல் என்பது ட்ரீம் கம் ட்ரூ மாதிரி இருக்கு. எங்கப்பா இருந்திருந்தா ரொம்ப சந்தோஷப் பட்டிருப்பார்!”
“அப்பா???”
“இந்த ஹாஸ்பிட்டல் எங்க அப்பாவோட கனவும் கூட சக்தி! அவரும் பிரசாத்துமா சேர்ந்து தான் இந்த ஹாஸ்பிட்டலை ஸ்டார்ட் செய்தாங்க. நான் கடைசியா பார்த்ததுக்கு இப்போ எல்லாம் ரொம்ப மாறிப் போயிருக்கு. டாக்டர் பிரசாத்தோட இந்த சோஷியல் சர்வீஸ்க்கு ப்ரேசிடன்ட் அவார்ட்க்கு அவரை கட்டாயம் ரெகமன்ட் செய்யனும். அமேஸிங் வொர்க்!”
“எதுக்கு நீங்களும் உங்க அம்மா, அப்பாவும் சொல்லாம கொள்ளாம இந்த ஊரை விட்டு போனீங்க?” சக்தி சந்தேகத்துடன் வினவினாள்!
சாந்ததுரை சக்தியின் கையில் காலியாக இருந்த கோப்பையை வாங்கினான்.
“சில விஷயங்களை சொல்லாம இருக்குறது தான் நல்லது ராம்போ மேடம்!”
“பெரிய மிஸ்டரி மேனா இருக்கீங்க SD!” சக்தி அதற்கு மேல் தோண்டி துறுவாமல், மீண்டும் தன் வைட் போர்டின் முன்னே சென்று நின்றாள்!
“ஆனால், உங்க மிஸ்ட்ரியை கண்டுப்பிடிக்குறதுக்கு முன்னாடி இந்த மிஸ்ட்ரியை நான் முடிக்கனும்!” சக்தியின் விழிகள் போர்டில் இருந்த எழுத்துக்களையும், குறிப்புகளையும் கவனத்துடன் படிக்க தொடங்கியது!