“ப்ச்!!!! எதையோ மிஸ் செய்றேன். என்ன???” சக்தி தனக்குள் பேசுபவள் போல மீண்டும் சொன்னாள்.
சாந்த்துரை நாற்காலியில் இருந்து எழுந்து சக்தி நின்ற இடத்தின் பக்கம் சென்றான்.
“அப்படி என்ன இதைப் பார்த்து யோசிக்குறீங்க சக்தி?” திடீரென ரொம்பவும் பக்கத்தில் பின்னால் இருந்து கேட்ட சாந்ததுரையின் குரலில் திடுக்கிட்டு ஓரடி பின்னே வைத்தாள் சக்தி. அங்கே நின்றுக் கொண்டிருந்த சாந்ததுரையின் மேலே இடித்துக் கொண்டாள்.
உடனேயே “சாரி” சொல்லி விட்டு தன் பழைய இடத்திற்கு சென்று விட்டாள்! ஆனால் சாந்ததுரை தான் திகைத்துப் போய் நின்றான்.
ஒரு டாக்டர் என்ற முறையில் மருத்துவம் பார்த்தவர்கள், கூட படித்தவர்கள், தோழிகள் என்று எத்தனையோ பெண்களிடம் பேசி இருக்கிறான், பழகி இருக்கிறான். ஆனால் சக்தியின் மெல்லிய ஸ்பரிசம் அவனுள் புது விதமான உணர்வுகளை எழுப்பி இருந்தது.
அவளை திரும்பவும் அதிசயத்துடன் பார்த்தான்.
சக்தி அதை கவனிக்கவில்லை. பிரணய் மூலம் அஹல்யா பற்றி தெரிந்துக் கொண்டிருந்த விபரங்கள் சேகரன் மரணத்தின் மேல் சக்திக்கு இருந்த ஆர்வத்தை அதிகப் படுத்தி இருந்தது. அஹல்யாவில்ன் பெயர் இறந்துப் போனவனின் பெயருடன் தவறாக இணைத்து பேசப் படுவதை நிறுத்தி ஆக வேண்டும் என்று விரும்பினாள். சத்யாவைப் போல உணர்ச்சி வசப்படாமல் பொறுமையாக அலசி ஆராய்ந்துக் கொண்டிருந்தாள்!
சாந்ததுரையின் மனம் அவள் வசம் ஈர்க்கப் பட்டுக் கொண்டிருப்பதை அவள் உணரவே இல்லை!
“குட் நைட் சின்ட்ரெல்லா,” என்றான் சாந்ததுரை!