(Reading time: 23 - 46 minutes)
Indru nee naalai naan
Indru nee naalai naan

  

”அப்புறம் இந்த ஊர்காரங்க உன்னை வேலைக்கு வைச்சிக்க மாட்டாங்க நண்பா“

  

”ஒருத்தர் வைச்சிப்பாங்க“

  

”அதுயாரு”

  

”காவேரிதான்”

  

”நண்பா இந்த காரியத்தை மட்டும் செய்யாதடா, வீட்ல இருக்கறப்பவே எந்நேரமும் உன்னை திட்டி குறை சொல்லி மட்டம் தட்டறதே பொழப்பா வைச்சிருக்கா, இதுல நீ அவள்கிட்ட வேலைக்கு போனேன்னு வையேன் அவ்வளவுதான், ஏற்கனவே நீ நரகத்தில வாழற இன்னும் உன் நிலைமையை மோசமாக்கிடுவா வேணாம் நண்பா”

  

”வேற வழியில்லை இன்னிக்குப் பார்த்தியா எப்படி கணக்கு பார்த்தாள்ன்னு, நாளைக்கே என்னோட செலவுக்கும் ஒரு பேச்சு பேசுவா, எதுக்கு அவள் சம்பாதிக்கறது இந்த வீட்டு செலவுக்கே இருக்கட்டும், நான் சம்பாதிக்கறது எனக்கும் உனக்கும் நம்ம நாய்க்கும் சரியாயிடும்”

  

”வேணாம் நண்பா தெரிஞ்சே புதைகுழியில விழப்போறியா”

  

”ஏற்கனவே விழுந்துட்டேன், இனிமேல என்ன இருக்கு ஏகத்துக்கும் அவள்கிட்ட நான் பேச்சை கேட்டுக்கிட்டேன், இனி புதுசா கேட்க என்ன இருக்கு சொல்லு”

  

”ஆனாலும்”

  

“விடு என் தலையெழுத்து படி நடக்கட்டும்” என சொல்லும் போதே காவேரி வந்தாள்

  

”என்ன இங்க மாநாடு” என கேட்க கொம்பனோ

  

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.