”உன்கிட்ட ஒரு விசயம் பேசனும்”
”எதைபத்தி”
”எனக்கொரு வேலை வேணும்”
”வேலையா புரியலையே”
”என்னோட தேவைக்கும் என்னை நம்பி வந்தவங்க தேவைக்கும் நான் சம்பாதிக்கறதா முடிவு செய்துட்டேன்”
”அதுக்கு நீ என்கிட்ட வேலையில சேர போறியா”
”ஆமாம்“
”யோசிச்சிதான் பேசறியா ஏற்கனவே நீ நரகத்தில இருக்க மறந்துடாத”
”நரகம் எனக்கு பழகிடுச்சி”
”அப்புறம் உன் இஷ்டம் இருக்கற வீட்டு வேலைகளை முடிச்சிட்டு எப்படி உன்னால தோப்பு வேலைக்கு வரமுடியும்”
”எப்படியோ நான் முடிச்சிட்டு வரேன் எனக்கு வேலை கொடு அது போதும்”
”சரி தரேன், சீக்கிரமா வேலையை முடிச்சிடு வா, நாம ரெண்டு பேரும் சேர்ந்தே தோப்புக்குப் போகலாம், அங்க வந்து நீ என் புருஷன் நான் உன் பொண்டாட்டின்னு உரிமை பாராட்டக்கூடாது, அங்க நான் முதலாளி நீ தொழிலாளியாதான் இருக்கனும், என்னை பேர் வைச்சி கூப்பிடக்கூடாது, சின்னம்மான்னு கூப்பிடனும் அப்புறம் நான் என்ன வேலை தந்தாலும் செய்யனும், செய்யத் தெரியலைன்னாலும் கத்துக்கிட்டு செய்யனும், சாயங்காலம் வழக்கம் போல என்கூடவே நீ வீட்டுக்கு வந்துடலாம்”