அந்த ஊரின் மைனர் மாடசாமி துவங்கி ரோட்டோர ரோமியோ குமார் வரை அவள் மீது அக்கறை கொண்டார்கள்.
ஓரளவிற்கு மேல் மோகன் தம்பதியருக்கு அவளை பாதுகாப்பது இயலாத காரியம் என்பது புரிந்தது. அந்த ஊரின் போலீஸ் ஸ்டேஷன் பல மைல்களுக்கு அப்பால் இருந்தது. அங்கே சென்று அவளின் விபரங்களை சொன்னார்கள்.
அவளின் போட்டோ தவிர பகிர்ந்துக் கொள்ள அவர்களிடம் பெரிதாக விபரமும் இல்லை. நகை என அவள் அணிந்திருந்ததெல்லாம் காதில் ஒரே ஒரு சின்ன தோடு! மற்றபடி அவளை ஆற்றின் கரையில் கண்டுபிடித்த போது அவள் அணிந்திருந்த உடை விபரங்களையும் கொடுத்தார்கள்.
ஆனாலும் ஒரு பயனும் இல்லை!
என்ன செய்வது என்று புரியாமல் மோகன், வெற்றியிடம் பேச, அவன் அவளை அவன் வீட்டிற்கே அழைத்து வந்தான். அவனுடைய அம்மா ராஜம்மாளுக்கும் நிலாவை பிடித்தது. எனவே கடந்த நான்கரை மாதங்களாக பகுதி வீடாகவும், பகுதி ஹோட்டலாகவும் செயல்படும் அந்த வெற்றி பவன் அவளின் இருப்பிடமாக மாறி இருந்தது.
நல்லவனுக்கு நல்லவனாக, கெட்டவனுக்கு கெட்டவனாக இருக்கும் வெற்றி மீது மாடசாமி, குமார் போன்றவர்களுக்கு ஓரளவிற்கு பயம் இருந்ததால், அதற்கு மேல் அவளுக்கு தொல்லை ஏற்படவில்லை.
ஆனாலும் வெற்றி அவளை எங்கும் தனியாக வெளியே செல்ல அனுமதிப்பதில்லை. அவளை பெயர் சொல்லாமல் தங்கச்சி என்றே எப்போதும் அழைப்பான் அவன்.
நிலாவின் இதழ்களில் புன்முறுவல் உதயமானது!
“எத்தனை தடவை இப்படி காலையிலேயே எழுந்து தனியா வேலையை ஆரம்பிக்காதேன்னு உன் கிட்ட சொல்லிட்டேன், கேட்கவே மாட்டீயா நீ?” கேள்வியுடன் பரபரப்பாக வந்தாள்