மிருதுளா.
நிலா அவளை அமைதியாக பார்த்தாள்.
மிருதுளாவிடம் கிராமத்தின் அழகு பளிச்சிட்டது. காலையிலேயே தலைக்கு குளித்து ஈரமாக இருந்த கூந்தலை டவலில் கட்டி வைத்திருந்தாள்.
மிருதுளாவிற்கு வெற்றி மீது காதலென்றால் அப்படி ஒரு காதல்! இருவருக்கும் இரண்டு மாதங்களுக்கு முன் தான் திருமணம் ஆகி இருந்தது.
“என்ன கேள்வி கேட்டா பதில் சொல்லாமல் பார்த்துட்டே இருக்க?” மிருதுளா நிலா பக்கம் பார்த்துக் கேட்டாள்!
“நாளுக்கு நாள் உங்க அழகு அதிகமாகிட்டே போகுதே எப்படின்னு யோசிச்சிட்டு இருக்கேன்!” மெல்லிய புன்னகை துணையுடன் சொன்னாள் நிலா!
“இது தெரியாதா உனக்கு, ஒரு மந்திரவாதிக்கிட்ட ரகசிய மருந்து வாங்கி வச்சிருக்கேன். தினமும் நைட் அதை போட்டுக்குறதால தான் அழகு அதிகமாகுது...”
“எனக்கு தெரியாமல் என்ன, அந்த ரகசிய மருந்து பேரு வெற்றி தானே???? இந்த பளிச்சிடும் மின்னல் அழகெல்லாம் இப்போ இரண்டு மாசமா தானே தெரியுது????”
“வாயாடி வேலையைப் பாரு!”
“நீங்க தானே வேலை செய்யாதேன்னு சொன்னீங்க?”
“தெரியாம சொல்லிட்டேங்க. நீங்க வேலையையே பாருங்க! ஆமாம் காஃபியாவது குடிச்சியா இல்லையா?”
“ஹுஹும்ம்...”