பாரதி பதில் சொல்லாமல் அமைதியாக இருக்கவும், “பாரு!” என பதறினாள் பவித்ரா.
அந்த வினாடியில் மனதில் சிறு தெம்பு வந்துவிட்டதாக தோன்றியது பாரதிக்கு!
“பவி, நீ நாளைக்கு பிசியா? நான் உன்கிட்ட கொஞ்சம் பேசனும்...”
“என்ன கேள்வி இது பாரு? உனக்கு இல்லாத டைமா? அதுவும் இன்னைக்கு செய்த குளறுபடிக்கு நீ என்ன சொன்னாலும் நான் இப்போ ஓகே தான் சொல்வேன்...”
“அது சரி...! இந்த பேச்சுக்கு எல்லாம் ஒரு குறைச்சலும் இல்லை...”
“நிஜமா தான் சொல்றேன் பாரு... நான் நாளைக்கு உங்க வீட்டுக்கு வரவா?”
“இல்லைப்பா வேண்டாம், அது சரி படாது... அப்படி பேச முடிஞ்சா நானே உன் வீட்டுக்கு வந்திருப்பேனே... நான் உன் கிட்ட தனியா பேசனும்... காலையில கொஞ்சம் சீக்கிரம், ஒரு ஏழு மணி போல நம்ம பிள்ளையார் கோவிலுக்கு வர முடியுமா?”
“ஏழு மணிக்கா?”
பவித்ராவின் குரலில் இருந்த தயக்கதிற்கான காரணம் புரிந்து, “அண்ணாக்கு நீ குக் செய்யணும்ல... ப்ச்... “ என்றாள் பாரதி!
அவசரமாக யோசித்த பவித்ரா,
“அதெல்லாம் அட்ஜஸ்ட் செய்துக்கலாம் பாரு... சரி, நான் வரேன் பிரச்சனை இல்லை...” என்றாள்.
“இல்லை பவி, நீ அண்ணாக்கு லஞ்ச் கொடுக்கனுமே...”
“அதெல்லாம் பரவாயில்லை! ஒரு நாள் வெளியே சாப்பிட்டா அவர் ஒன்னும் குறைஞ்சு