“ஏய்...”
“இப்போ உங்களுக்கு என்ன வேணும்?”
“இங்கே வீட்டில் முக்கியமான ஃபங்க்ஷன் இருக்கும் போது, இங்கே இருக்காம எங்கே போய் தொலைஞ்ச?”
விழாவிற்கு ஏன் தயாராகிறாய் என்று கேட்டவனே இப்போது ஏன் இங்கே இல்லாமல் போனாய் என்று கேட்கிறான்! பாரதி கணவனை ஆராயும் கண்ணோடுப் பார்த்தாள். அவன் அதை எதையும் கண்டுக் கொள்ளவில்லை.
“அப்படி எங்கே போன?”
விவேக் கேட்ட கேள்வியையே மீண்டும் கேட்க, பாரதி அதைப் பற்றி யோசித்துக் கொண்டே, அவன் கேள்விக்கு நேரடியாக பதில் சொல்லாமல்,
“இங்கே எனக்கு என்ன வேலை இருக்கு?” என்றாள்!
“திமிரு தானே உனக்கு?”
விவேக் அவளிடம் இப்படி பேசுகிறான் என்பதை அவளால் இப்போதும் கூட முழுதாக நம்ப முடியவில்லை!!! ஆனால், மனதில் எழுந்த வலியை காட்டிக் கொள்ளாமல்,
“நீங்க தானே எதுக்கு நீ இந்த ஃபங்க்ஷன் எல்லாம் அட்டென்ட் செய்றன்னு கேட்டீங்க? இப்போ நான் இங்கே இல்லாமல் போனாலும் தப்பா?” என அமைதியாக ஆனால் சூடான பதிலை சொன்னாள் பாரதி!
“ஏய், ரொம்ப பேசின, பல்லை உடைச்சிடுவேன்...”
இப்படி எல்லாம் பேசுவது விவேக் தானா என்று நம்ப முடியாமல் பாரதி ஒரு வினாடி