போயிட மாட்டார்...”
“ஆனால், அண்ணா அப்படி சாப்பிட மாட்டாரே...”
“அந்த கவலையை விடு, நான் ஏழு மணிக்கு அங்கே இருப்பேன்...”
“ஏழரை மணி மாதிரி வந்தா கூட போதும்... நான் உன்னை வீட்டுக்கு வந்து பிக்கப் செய்யணுமா?”
“இல்லை பாரு, நானே மேனேஜ் செய்திடுவேன்... நீ காருல தானே வருவ?”
“ஆமா...! ரொம்ப தேங்க்ஸ் பவி...” என்றாள் பாரதி நெகிழ்ச்சியுடன்.
🌼🌸❀✿🌷
பவித்ராவுடன் பேசிய பின்பு பாரதியின் மனதை அழுத்திக் கொண்டிருந்த கவலையின் பாரம் கொஞ்சம் குறைந்தது. மறைந்து, இப்படி வந்து ஒளிந்துக் கொள்வதால் எதுவும் நடக்க போவதில்லை... என்ன தான் பிரச்சனை என்று ஆராய்ந்து தெரிந்துக் கொள்வது என்று முடிவு செய்தாள். வீட்டினுள் ஆர்ப்பாட்டம் குறைந்து விட்டதாக தோன்றவும், புது தெம்புடன் எழுந்து உள்ளே சென்றாள்.
தோட்டத்தில் இருந்து வீட்டினுள் காலடி எடுத்து வைத்தவள், எதிரில் வேகமாக வந்த விவேக்கின் மீது கிட்டத்தட்ட மோதிக் கொண்டாள்! அவசரமாக விலகி, சுதாரித்து நின்று, கணவனின் முகத்தை பார்த்த பாரதி திகைத்தாள்! விவேக்கின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்துக் கொண்டிருந்தது! இப்போது என்ன என்ற யோசனையுடன் அவள் பார்க்க, கோபத்துடன் வார்த்தைகளை கடித்து துப்பினான் விவேக்.
“உனக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கா?”
“அறிவா, தெரியலையே...”