“அதை விடு! எனக்கு கல்யாணம் முடியுற வரைக்கும், விவேக் உங்க வீட்டுக்கு வந்ததை பத்தியோ, அவர் உங்க எல்லோர் கிட்டேயும் பேசினதை பத்தியோ என்கிட்ட சொன்னீயா?”
“அது உன் நல்லதுக்காக தான்...”
“ஆமாம், நீ என் கிட்ட ஒரு விஷயம் சொல்லாமல் மாசக் கணக்கில மறைச்சு வச்சா அது என் நல்லதுக்காக... ஆனால், நான் ஒரு விஷயம் சொல்லலைனா மட்டும் அது ஒரு பெரிய இஷ்யூவா?”
“இல்லை பாரு, இது... ஹுஹ்... ஐ ஆம் சாரி...”
“யாருக்கு வேணும் உன் சாரி? நீயே வச்சுக்கோ... நீ தான் ஃபோன் செய்தா கூட எடுக்க மாட்டீயே...”
“உன்னை ரொம்ப ஹர்ட் செய்துட்டேன்னு புரியுது, ரொம்ப சாரி பாரு...”
பாரதியிடம் திட்டு வாங்கி கொண்டு சாரி சொல்லிக் கொண்டிருந்த மனைவியை பார்த்து நக்கலாக புன்னகைத்தபடி அமர்ந்திருந்தான் ரமேஷ்! அவனை கண்டும் காணாததுப் போல் பாரதியிடம் மன்னிப்பு கோரும் படலத்தை தொடர்ந்தாள் பவித்ரா...
“சாரி பாரு...”
“வேண்டாம் பவி, எனக்கு உன் சாரி எதுவும் வேண்டாம்... எனக்குன்னு யார் இருக்கா, யாருமே இல்லாதவ தானே நான்...”
“இன்னொரு தடவை இப்படி சொன்ன அவ்வளவு தான்...! என்னை பத்திக் கூட கவலைப் படாம, உன் கிட்ட என்னை போட்டுக் கொடுத்த பாச மலர் அண்ணன் இருக்கும் போது இன்னொரு தடவை இப்படி பேசலாம்னு கூட நினைச்சு பார்க்காதே...”