“அவளுக்கு பழைய விஷயம் எதுவும் நினைவில்லை சார்...” என்றாள் மிருதுளா பரிவுடன்.
அந்த விஜயின் குரலில் உண்மை இருப்பதாக அவளுக்கு தோன்றியது.
வெற்றி அவளை பார்த்து முறைத்து விட்டு,
“வாயை மூடு!” என்றான் எரிச்சலுடன்.
“வாட், பிரின்சஸ்க்கு எதுவும் ஞாபகம் இல்லையா??? ஓ மை காட்! நவ் ஐ னோ...”
“சார், இவ உங்க தங்கச்சின்னு நீங்க சொல்றதை மட்டும் வச்சு நான் எப்படி நம்புறது? இப்போ இவ என் தங்கச்சி. நீங்க சரியான ஆதாரம் கொடுக்காமல் சொந்தம் கொண்டாட முடியாது!”
வெற்றி கோபமாக சொல்ல, யாருமே எதிர்பாராத வண்ணம் அவனை அணைத்துக் கொண்டான் விஜய்.
“தேங்க்ஸ், தேங்க்ஸ்! எங்க பிரின்சஸ் உங்களை போல ஒரு நல்லவர் கிட்ட பாதுகாப்பா இருந்திருக்கான்னு நினைக்கும் போது சந்தோஷமா இருக்கு!”
“சார் இங்கே பாருங்க...”
“ப்ளீஸ்... நான் முதல்ல என் சித்தி சித்தப்பாக்கு விஷயத்தை சொல்லிடுறேன்... சித்தி இவளை பார்க்காமல் சரியா சாப்பிடாமல் ரொம்ப மோசமான நிலமையில இருக்காங்க. தியாகுக்கு வேற சொல்லனும்... ஓ மை காட்! பிரின்சஸ் எத்தனை பேரை அழ வச்சுட்ட நீ!”
விஜய் நிலாவை பார்த்து சொல்ல, மிருதுளா நிலாவை பாதுகாப்பவள் போல் அணைத்துக் கொண்டு,
“நிலா உங்க சித்தி பொண்ணா சார்?” என அவனிடம் வினவினாள்.