இடது பக்கம் மேலும் இரண்டு இளைஞர்கள் இருந்தார்கள்.
எல்லோர் முகத்திலும் உண்மையான சந்தோஷம் இருந்தது!
இது அவளின் குடும்பமா??? இவன் சொல்வது உண்மையாக இருக்க முடியுமா?
அங்கே நடந்த பேச்சு சத்தம் கேட்டு மிருதுளாவும், ராஜம்மாவும் கூட அங்கே வந்தார்கள்.
நிலாவையும் அவள் முகத்தில் இருந்த ஆச்சர்யத்தையும் கவனித்த படி கணவனின் கையில் இருந்த பர்சை வாங்கி அதில் இருந்த படத்தை பார்த்தாள் மிருதுளா.
மனைவியிடம் படத்தை கொடுத்த வெற்றி இப்போதும் சந்தேகத்துடன் அந்த புதியவனை பார்த்தான்.
“ஒரு போட்டோவை வச்சு நீங்க சொல்றதை நான் எப்படி நம்புறது?“
“பிரின்சஸோட அம்மா அப்பா, என்னோட சித்தி, சித்தப்பா சொன்னால் நம்புவீங்களா?”
“முதல்ல உங்க தங்கச்சி எப்போ, எப்படி காணாமல் போனாங்க? இவ்வளவு நாள் தேடாமல்...”
வெற்றியை மேலே பேச விடாமல் குறுக்கிட்டான் புதியவன்.
“தேடாமலா??? ஆறு மாசமா அவளை தேடுற வேலை மட்டும் தான் எங்களுக்கு! பிரின்சஸ், ஏன் இப்படி எதுவுமே சொல்லாமல் நிக்குற? இவர் கிட்ட சொல்லு... நான் உன் விஜய் அண்ணான்னு சொல்லு...” என நிலாவை பார்த்து சொன்னான்...
நிலா தயக்கத்துடன் அவனை பார்த்துவிட்டு, மிருதுளாவின் அருகே நெருங்கி நின்றாள்.
“பிரின்சஸ்...?” அவன் நம்ப முடியாதவன் போல கேள்வியுடன் பார்க்க,