(Reading time: 7 - 14 minutes)
Unnaruge naan irunthaal
Unnaruge naan irunthaal

தொடர்கதை - உன்னருகே நான் இருந்தால்...  - 62 - பிந்து வினோத்

62. எந்தன் உயிரே... எந்தன் உயிரே...

  

This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.

  

ங்கே நரேந்திரன் மட்டுமல்லாமல், கற்பகம், நிரஞ்சன், உமா, மது என மொத்த குடும்பத்தினருமே இருந்தார்கள்!!!

  

அது அப்பா...” என தொடங்கி, விவேக் விளக்கம் கொடுக்க முனைந்தான்! நரேந்திரன் அவனை பேச அனுமதிக்கவில்லை!

  

வேண்டாம் விவேக்! நீ எதுவும் சொல்ல வேண்டாம்... எந்த காரணமா இருந்தாலும் இப்படியா? நீ இப்படி எல்லாம் நடந்துப்ப, பேசுவன்னு நான் கனவில் கூட நினைக்கலை...”

  

சாரி அப்பா, ஏதோ கோபத்தில பேசிட்டேன்...” விவேக்கின் குரல் தணிந்து ஒலித்தது!

  

சற்று முன் அவளிடம் எரிந்து விழுந்த விவேக் தானா பேசுவது என்று பாரதிக்கு சந்தேகமே ஏற்பட்டது!!!

   

அதற்குள் நரேந்திரன் தொடர்ந்துப் பேசினார்!

   

என்ன தான் கோபம் இருந்தாலும்... இப்படியா? சரி அது போகட்டும்... பாரதி, விவேக், இரண்டுப் பேரும் கேட்டுக்கோங்க... நீங்க ஒன்னும் சின்னக் குழந்தைங்க இல்லை... நல்லா படிச்சு உங்க வாழ்க்கையை நீங்களாகவே நடத்தக் கூடிய மெச்சூரிட்டி உள்ளவங்க... இதுக்கு மேல உங்க பர்சனல் விஷ்யத்தில தலையிட எனக்கு விருப்பம் இல்லை... ஆனால் இரண்டு பேரும் ஒரு விஷயத்தை மட்டும் ஞாபகம் வச்சுக்கோங்க... கல்யாணம் என்பது விளையாட்டு விஷயம் இல்லை... நீங்க இரண்டு பேருமா விரும்பி ஏற்படுத்திக் கிட்ட வாழ்க்கை தான் இது... சண்டை வரது, கோபப் படுவது எல்லாம், எல்லா குடும்பத்திலும் நடக்குறது தான்... ஆனால், கோபத்தில் என்ன பேசுறோம், என்ன செய்றோம்னு புரியாத அளவுக்கு அது தலைக்கு மேல போகாமல் பார்த்துக்கனும்...”

  

நரேந்திரன் நிதானமாக ஆனால் அழுத்தமான தோரணையில் பேசவும், பாரதியின் மனதினுள் பழைய நினைவுகள் சலசலத்தது... அதன் தாக்கத்தினால் அவள் இமைக்க கூட மறந்து, அசையாமல் நின்றிருந்தாள்...

   

4 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.