பாரதி சாதாரணமாகவே கேட்கவும், தைரியம் பெற்றவளாக, “ஏன் அண்ணி அப்பா பேசும் பொது அப்படி ஷாக் ஆகி நின்னீங்க?” என வினவினாள் மது!
“அது... மாமா பேசினப்போ என்னோட அப்பா ஞாபகம் வந்தது மது...” என்றாள் பாரதி லேசாக தளுதளுத்த குரலில்!
பாரதியின் குரல் மாற்றத்தை கவனித்து விட்டு,
“ஓ! உங்களுக்கு உங்க அப்பா ரொம்ப பிடிக்குமா அண்ணி?” என அடுத்த கேள்வி கேட்டாள் மது!
“அப்பான்னு இல்லை, அம்மாவையும் ரொம்ப பிடிக்கும்... என் அப்பா, என்ன தான் செல்லம் கொடுத்தாலும், கொஞ்சினாலும், சில விஷயங்களில் ரொம்ப கண்டிப்பா இருப்பார்... தேவைப்படும் போது, இப்போ மாமா பேசினார் பார்த்தீயா, அந்த மாதிரி ஒருமாதிரியான அழுத்தமான குரல்ல பேசுவார்... அவர் அப்படி பேசினா, அதுக்கு மேல அந்த விஷயத்தில் எதுவும் பேசக் கூடாதுன்னு அர்த்தம்...”
“ம்ம்ம்...”
“சரி மது, டைம் ஆகுது நீ போய் படு...”
“சரி அண்ணி...“ என்று சொல்லிவிட்டு திரும்பிய மது, ஏதோ நினைவு வந்தவளாக மீண்டும் பாரதி பக்கம் திரும்பினாள்!
“உங்க தலைவலி எப்படி இருக்கு அண்ணி? நீங்க எதுவுமே சாப்பிடலையே? பசிக்கலையா, ஏதாவது சாப்பிடுறீங்களா?”
மதுவின் அன்பை உணர்ந்து புன்னகைத்த பாரதி,
“பசிக்காமல் என்ன? பசி உயிர் போகுது... உன்னை அந்த பக்கம் அனுப்பிட்டு கிச்சன் பக்கம்