போகலாம்னு நினைச்சேன்...” என்றாள் ஈஸியாக!
ஒரு சில வினாடிகள் பாரதியை கூர்ந்து நோக்கினாள் மது.
பாரதிக்கு அந்த பார்வைக்கான அர்த்தம் புரியவில்லை!
“ஏன் மது அப்படி பார்க்குற?”
“ஒண்ணுமில்லை அண்ணி... வாங்க, நான் உங்களுக்கு கம்பெனி கொடுக்குறேன்...”
“தேங்க்ஸ்... ஆனால், நான் அஞ்சு நிமிஷத்தில சாப்பிட்டு முடிச்சிடுவேன். நீ அதைப் பத்தி எல்லாம் கவலை பட வேண்டாம்... போ, போய் தூங்கு...”
“என்ன அண்ணி நீங்க, இதுக்கும் கூடவா தேங்க்ஸ் சொல்வீங்க? எப்போ தான் இப்படி ஃபார்மலா பேசுறதை விடுவீங்களோ... லீவ் டைம் தானே, எனக்கு தூக்கம் வரலை, வாங்க... நான் சும்மா கூட இருக்கேன்... நீங்க சாப்பிடுங்க...”
அதற்கு மேல் மறுக்க முடியாமல், மதுவையும் அழைத்துக் கொண்டு சமையலறைக்கு சென்றாள் பாரதி!
🌼🌸❀✿🌷
ஏதோ யோசனையோடு அமர்ந்திருந்த கற்பகத்தை பார்த்த நரேந்திரன், அவளின் அருகில் அமர்ந்தபடி,
“என்ன கல்யாணப் பொண்ணு பயங்கரமான யோசனையில் இருக்கீங்க?” என்றார்.
மற்றவர்களுக்கு அமைதியான ஆனால் கண்டிப்பானவராக காட்சி அளிக்கும் கணவனின் இந்த அவளுக்கு மட்டுமே சொந்தமான அன்பான, காதலான முகத்தை ஆர்வத்துடன் பார்த்தாள் கற்பகம். முப்பத்தி நான்கு ஆண்டுகளாக தன்னுடைய அன்பினால் அவளை பாச பிணைப்பில் கட்டி போட்டு வைத்திருந்தார் நரேந்திரன்! மனைவியின் பார்வையை கவனித்த நரேந்திரன்,