(Reading time: 7 - 13 minutes)
Oru kili uruguthu
Oru kili uruguthu

  

🌼🌸❀✿🌷

   

ந்திக்க வந்தவரை பார்த்து பேசி முடித்து விட்டு ஜீப்பில் ஏறினாள் சக்தி. அவள் தெரிந்துக் கொண்ட விபரங்கள் இப்போதும் காதில் ரீவைண்ட் ஆகி ஒலித்துக் கொண்டிருந்தது.

  

இன்னும் சில விபரங்கள் மட்டும் அவளுக்கு தெளிவாக புரியவில்லை. சிறியதாக லிங்க் எதுவோ மிஸ் ஆகிறது என்று நினைத்துக் கொண்டாள்! நிறைய விஷயங்கள் ஒன்றோடு ஒன்று தொடர்பில்லாமல் இருப்பதாக தோன்றியது. மொபைலில் இருந்த நோட்ஸை புரட்டினாள்!!! ‘நிறைய’!!!!! ஒரு சந்தேகம் வர, பிரணய் நம்பரை டையல் செய்தாள்.

  

“சக்தி?”

  

“பிரணய், அன்னைக்கு எனக்கு அஹல்யான்னு ஒரு பொண்ணு பத்தி டீடெயில்ஸ் கலக்ட் செய்துக் கொடுத்தீயே ஞாபகம் இருக்கா?”

  

“இருக்கு சக்தி. என்ன வேணும் சொல்லுங்க?”

  

“மதியூர்ல இருக்க கௌரவோட அம்மா சொத்து பத்தி சொன்னப்போ நிறைய இடம்னு சொன்ன. அது பத்தின டீடெயில்ஸ் இருக்கா?”

  

“இருக்கும் சக்தி. பார்த்து சொல்றேன் இருங்க!”

  

ஸ்பீக்கர் ஆன் செய்து விட்டு, பிரணய் சொன்ன விபரங்களை மொபைலில் டைப் செய்தாள் சக்தி. டைப் அடிக்கும் போதே மிஸ் ஆகிக் கொண்டிருந்த லிங்க் என்ன என்பது அவளுக்கு புரிந்துப் போனது!!!!

  

“தேங்க்ஸ் பிரணய். திரும்ப கூப்பிடுறேன்!” பிரணய் பதில் சொலவதைக் கூட கேட்காமல் அழைப்பை துண்டித்தாள் சக்தி.

  

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.