(Reading time: 25 - 50 minutes)
Poova? thalaiya?
Poova? thalaiya?

கண்ணகியோ சிலம்புவிடம்

  

”உனக்கு ஏதோ தெரிஞ்சிருக்கு அதை சொல்லி நாங்க கஷ்டப்படறதை பார்க்கவே வந்திருக்க சரி சொல்லு கோவலன் எங்க இருக்காரு” என கேட்க அவன் ஆச்சர்யப்பட்டான்.

  

”பரவாயில்லையே நீ புத்திசாலிதான், நேரா விசயத்துக்கு வந்தட்ட, நானும் இதை சொல்லதான் வந்தேன் ஆனா கோவலன் இருக்கற இடம் தெரிஞ்சா நீ ரொம்ப வருத்தப்படுவ”

  

”நான் வருத்தப்படனும்னுதானே கிளம்பி வந்திருக்க, அப்புறம் என்ன சொல்லு அவர் எங்க”

  

”சொன்னா அதனால உனக்கு என்ன லாபம்”

  

”அவரோட தாத்தா இங்க உயிருக்கு போராடிக்கிட்டு இருக்காரு கோவலனை பார்த்தா அவருக்கு நிம்மதியா இருக்கும்”

  

”அய்யோ பாவம் ச்சுச்சு” என உச்சு கொட்டினான்

  

”நீ பரிதாபப்படற மாதிரி நடிச்சது போதும் உண்மையை சொல்லு கோவலன் எங்க”

  

“அதுக்கு முன்னாடி நீ ஒரு உண்மையை சொல்லு”

  

”என்னது”

  

”உன்னைப் பார்த்தா நல்ல பொண்ணு போலதான் தெரியுது இருந்தாலும் கேட்கறேன் பணத்துக்காகதான் நீ கோவலனை கல்யாணம் செய்துக்கிட்டியா” என கேட்க கண்ணகிக்கு கோபமே எழுந்தது

  

”போதும் வார்த்தையை விடாத”

  

”நீ எப்படிப்பட்டவள்ன்னு எனக்கு நல்லாவே தெரியும், நேர்மையானவ கண்டிப்பா பணத்துக்காக கோவலனை கல்யாணம் செய்திருக்க மாட்ட, வேற என்ன காரணம் சொல்லு”

One comment

  • கோவலனை பிச்சகாரனாக்கி அலையவிடுங்க. அப்படியாவது புத்தி வருதுன்னு பாக்கலாங

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.