”கண்டிப்பா நீ அதை தெரிஞ்சிக்கனுமா”
”அவசியம் தெரிஞ்சிக்கனும் சொல்லு”
”சொன்னாதான் கோவலன் இருக்கற இடம் சொல்வியா”
”ஆமாம்”
“இதுக்கும் அதுக்கும் என்ன சம்பந்தம் இருக்கு”
”இருக்கு அதனாலதானே கேட்கறேன்”
”எதுக்கு இப்படி பொடி வைச்சி பேசற”
”உண்மையை சட்டுன்னு சொல்லிட்டா நீ ஷாக்கில சில விசயங்களை மறந்துடுவ அதனாலதான்”
”ஈஸ்வரமூர்த்திக்காக நான் இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டேன்”
”நினைச்சேன் இப்படித்தான் நடக்கும்னு, சின்ன வயசு அனுபவமில்லாத உன்னை பிரின்சிபாலா ஆக்கினப்பவே நான் சந்தேகப்பட்டேன், நான் நினைச்சது சரியா போச்சி அவர் ஆரம்பத்தில இருந்தே உன்னையும் கோவலனையும் சேர்த்து வைக்கனும்னுதான் உன்னை பிரின்சிபாலா ஆக்கியிருக்காரு”
”அதான் விசயம் தெரிஞ்சிடுச்சில்லை, இப்பவாவது சொல்லு அவர் எங்க அவசரமா அவரை போய் பார்த்து கையோட கூட்டிட்டு வரனும், தாத்தாவோட நிலைமை மோசமாகுது பாரு”
”உன் அவசரம் எனக்குப் புரியுது கண்ணகி, கோவலன் எங்க இருக்கான்ங்கற விசயம் ரொம்ப முக்கியமானது அதனால இங்க ஒரு உயிருக்கு நல்லது செய்யலாம், பதிலுக்கு எனக்கு என்ன