(Reading time: 25 - 50 minutes)
Poova? thalaiya?
Poova? thalaiya?

என சொல்ல கண்ணகியின் கண்கள் குளமாகி கண்ணீர் ஆறாக கன்னத்தில் ஓட உதயமூர்த்தியோ சிலம்புவிடம்

  

”நடக்கறதை உனக்கு சாதகமாக்கிக்கிட்ட போல, சரி சரி கிளம்பு போ கல்லூரி பிரின்சிபால் ஆகனும்னு ஆசைப்பட்டல்ல அப்படியே இரு ஆனா இந்த காதல் விவகாரம் வெளிய யாருக்கும் தெரியக்கூடாது, முக்கியமா பெரியவருக்கு புரியுதா”

  

”ஓ புரியுதே நல்லாவே புரியுது அப்ப நாளையில இருந்து நான் பிரின்சிபால் வேலையில சேர்ந்துடறேன் என் மேல இருக்கற போலீஸ் கேஸை நேரத்தோட வாபஸ் வாங்கிடுங்க, நன்றி நான் கிளம்பறேன்” என சொல்லிவிட்டு அவன் சென்றுவிட கண்ணகி இன்னும் திக்பிரமையில் இருந்தாள்.

  

உதயமூர்த்தி தன்னை சுதாரித்துக் கொண்டு கண்ணகியிடம்

  

”கண்ணகி நடந்ததை நாம சரியாக்கலாம் சிலம்பு சொன்னது எல்லாமே உண்மையாயிருக்கனும்னு அவசியம் இல்லைம்மா, நான் போய் கோவலனை பார்த்து கையோட அவனை கூட்டிட்டு இங்க வந்துடறேன் நீ இங்கயே இரும்மா” என சொல்ல அவளோ

  

”நானும் வரேன்”

  

“வேணாம் அங்க என்ன மாதிரி சூழ்நிலை இருக்குமோ தெரியலை, ஒருவேளை சிலம்பு சொன்னது போல இருந்தா அந்த அசிங்கத்தை நீ பார்த்து கஷ்டப்படனுமா ஒண்ணும் வேணாம் நீயிரு இங்கயே இதோ நான் இப்ப வந்துடறேன்” என பதட்டமாக சொல்லிவிட்டு அவர் அங்கிருந்து சென்றுவிட கண்ணகி நிலைகுலைந்துப் போய் ஒரு இடத்தில் அமர்ந்துக் கொண்டாள்.

  

மறுபக்கம் மாதவி கோவலனிடம் கெஞ்சிக் கொண்டிருந்தாள் ஆனால் அவனோ அவள் சொல்வதை செய்ய மனமின்றி பிடிவாதமாக இருந்தான்

  

One comment

  • கோவலனை பிச்சகாரனாக்கி அலையவிடுங்க. அப்படியாவது புத்தி வருதுன்னு பாக்கலாங

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.