(Reading time: 25 - 50 minutes)
Poova? thalaiya?
Poova? thalaiya?

செய்துட்டதை நினைச்சி நிலைகுலைஞ்சி போயிட்டா”

  

”அய்யோ அப்ப அவளுக்கு கோவலன் இங்க இருக்கற விசயம் தெரிஞ்சிடுச்சா“

  

”ஆமாம் கூடவே உனக்கும் கோவலனுக்கும் நடுவில இருக்கற காதலும் தெரிஞ்சிடுச்சி, சே எப்படிம்மா உன்னால அவளுக்கு துரோகம் இழைக்க முடிஞ்சது, பாவம்மா அவள் யாருக்கும் தீங்கு நினைக்காதவ அவளுக்கா இப்படி நடக்கனும்”

  

”இல்லை இல்லை நீங்க நினைக்கற மாதிரியில்லை நான் கோவலனை காதலிக்கலை அவர்தான் என்னை காதலிக்கறதா சொன்னாரு”

  

”எப்ப சொன்னான்”

  

”அது அது முன்ன”

  

”என்ன”

  

”ப்ச் இல்லை அவர் முன்னாடியே சொன்னாரு அதை நான் பெரிசா எடுத்துக்கலை”

  

”அப்பவே நீ உன் தோழிகிட்ட சொல்லியிருக்கலாமே, இந்த கல்யாணமே நடந்திருக்காது, கண்ணகியும் நிம்மதியா இருந்திருப்பா, பெரியவருக்கும் உடல்நிலைமை மோசமாயிருக்காது”

  

”நான் அந்த விசயத்தை சாதாரணமா நினைச்சேன், கோவலனே கண்ணகிகிட்ட போய் என்னை கல்யாணம் செய்துக்கறியான்னு கேட்டதை நான் பார்த்தேன், அதுல இருந்து நான் அவரை விட்டு விலகிப் போயிட்டேன் ஆனா இப்ப அவராதான் என்னை தேடி வந்தாரு இதுல எனக்கு எந்த பங்கும் இல்லை என்னை நம்புங்க” என அவள் அழுதபடி பேச உதயமூர்த்தி மனம் கரையவில்லை

  

”போதும்மா மாட்டிக்கிட்டோம்னதும் நடிக்கறியா, இதோட உன் நடிப்பை நிப்பாட்டிக்க இப்ப உன்னால கோவலனை என்கூட அனுப்ப முடியுமா முடியாதா, அங்க ஒரு உயிர் ஊசலாடிக்கிட்டு இருக்கு, இவனைப் பார்த்தாதான் பெரியவரு கண்விழிப்பாரு,

One comment

  • கோவலனை பிச்சகாரனாக்கி அலையவிடுங்க. அப்படியாவது புத்தி வருதுன்னு பாக்கலாங

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.