”பாருங்க” என தர அவனும் பார்த்தான் முதலில் அதிர்ந்தான் பின் அந்த விசயத்தை இயல்பாக எடுத்துக் கொண்டான்
”சரி போகட்டும் இதனால என்ன” என இயல்பாக சொல்லி அந்த ஆல்பத்தை பக்கத்தில் தூக்கி போட அவளோ அதிர்ந்தாள்
”நீங்க கண்ணகிக்கு துரோகம் செய்றது வேற ஆனா உங்களால நானும்தானே அவளுக்கு துரோகம் செய்றேன், முன்னாடியே உங்க எண்ணத்தை பத்தி அவள்கிட்ட சொல்லியிருக்கனும் சொல்லாம விட்டது என்னோட தப்பு சே”
”வருத்தப்படாத நடந்தது நடந்துப் போச்சி இனி நடக்க வேண்டியதை பார்க்கலாம்”
”அதைதான் சொல்றேன் முதல்ல இங்கிருந்து கிளம்பிப் போங்க ப்ளீஸ்”
”முடியாது மாதவி நான் உன்னை விட்டு போக மாட்டேன்”
”அய்யோ இப்ப நான் என்ன செய்வேன், நேத்து நீங்க இங்க வந்தப்பவே நான் கண்ணகிகிட்ட தகவல் சொல்லியிருக்கனும், அப்ப இருந்த பயத்துல தகவல் சொல்லாம விட்டது தப்பா போச்சி, இனியும் தகவல் சொல்லாம இருந்தா அது நல்லாயிருக்காது இப்பவே சொல்றேன்” என சொல்லிக் கொண்டே போன் மூலம் கண்ணகியை தொடர்பு கொள்ள முனைய அதைக்கண்ட கோவலன் அவளை தடுத்தான்
”வேணாம் இப்படி செய்யாத, நான் கண்ணகிகிட்ட போறதாயில்லை அந்த போனை கொடு” என அவளிடம் வீம்பாக நிற்க அவளோ போன் தராமல் கண்ணகிக்கு போன் செய்ய முயல இதில் கோவலன் அவளை பிடித்து செல்போனை பறிக்க அதில் தடுமாறி மாதவி அவன் மீது சாய இருவரும் தரையில் விழுந்தார்கள் ஒருவர் மீது ஒருவர் படுத்திருக்க அந்த காட்சியைக்கண்டபடி உள்ளே வந்தார் உதயமூர்த்தி
”அடச்சே” என அவர் வெறுப்பாக சொல்ல அதைக்கேட்டதும் இவ்விருவரும் பிரிந்து எழுந்து