“என் தங்கை எதுக்காக வீட்டை விட்டு வந்தான்னு தெரியாம நான் அவளை எப்படி உங்க கூட அனுப்ப முடியும்???”
“வெற்றி...!” டாக்டர் மோகன் வெற்றியை கோபமாக அழைத்தார்... அவரை தடுத்து,
“பரவாயில்லை டாக்டர்... அவர் எங்க பொண்ணு மேல இருக்க அக்கறையில தானே கேட்கிறார், தப்பில்லை...” என்ற தியாகுவின் அப்பா குமரேசன், தன் மனைவி பக்கம் பார்த்தார்.
அவர் சொன்ன செய்தியை புரிந்துக் கொண்டு, வெற்றியை பார்த்து பேசினாள் தியாகுவின் அம்மா செவ்வந்தி!
“எல்லாமே என் பேச்சால வந்தது தம்பி... இவங்களுக்கு கல்யாணமாகி இரண்டு வருஷம் ஆச்சு... பேரன் பேத்தி பார்க்கனும்னு எனக்கு ஆசை... அதைப் பத்தி நான் சொல்ல போக, தியாகு ஏதோ கேட்க, என் மருமக கோபத்துல வீட்டை விட்டு கிளம்பிட்டா... அவ அப்படி எல்லாம் சட்டுன்னு கோபப் படுறவ இல்லை... தப்பு என் மேல தான்...” தணிந்த குரலில் சொன்னாள் செவ்வந்தி.
ஒரு சில வினாடிகள் அங்கே அமைதி நிலவியது!
மெல்ல தொண்டையை கணைத்துக் கொண்டார் டாக்டர் மோகன்... அனைவரும் அவரை பார்க்க, அவரின் பார்வை வெற்றியிடம் இருந்து கிருத்திகாவிடம் சென்றது... பின், தியாகுவின் மேல் வந்து பதிந்தது...
“இதை கேட்குறேன்னு தப்பா நினைக்காதீங்க! உங்க வீட்டுப் பொண்ணை காப்பாத்தி என் கிளினிக்குக்கு அழைச்சுட்டு வந்தப்போ, ஃபர்ஸ்ட் ஏய்ட் கூடவே வேற சில டெஸ்ட்ஸும் செய்தோம்... அதுல உங்க பொண்ணு வர்ஜின் அதாவது கன்னி பொண்ணுன்னு தெரிஞ்சது... இன்னைக்கு நாட்டுல நடக்குற விஷயங்களையும், அவளை கண்டுப்பிடிச்ச விதத்தில் ஏதாவது தவறா நடந்திருக்கான்னு பார்க்கவும் தான் இந்த டெஸ்ட் செய்தோம்... ஆனால் இப்போ நீங்க சொல்றதை கேட்கும் போது பல கேள்விகள் வருது... மிஸ்டர் தியாகு, உங்களுக்கு கல்யாணமாகி இரண்டு வருஷமாச்சுன்னு புரியுது... ஆனால், இந்த உண்மை உங்களுக்கு