(Reading time: 21 - 41 minutes)
Chinna marumagal
Chinna marumagal

தொடர்கதை - சின்ன மருமகள் - 11 - சசிரேகா

காரைக்குடி

  

மகேந்திரன் நேருக்கு நேராக வேங்கையனை பார்க்க அவனும் கெத்தாக அவரை பார்த்தான்.

  

”நீதான் வேங்கையனா” என கேட்க அவனும் தன் மீசையை முறுக்கியபடியே

  

”ஆமாம்” என்றான் கம்பீரமாக அதைக்கேட்டவர்

  

”உன் மனைவி எங்க” என அடுத்த கேள்வி கேட்க அதற்கு அவன் தடுமாறுவான் என நினைத்தார் ஆனால் அவன் தடுமாறவில்லை ஜானகியை கைகாட்டி

  

”அதோ அவள்தான்” என்றான் அதைக்கேட்டு அங்கிருந்த அனைவருமே அதிர்ந்தார்கள். மஹதியோ அழத்தொடங்க அவளின் அழுகையைக்கண்ட மகேந்திரன் வேங்கையனிடம்

  

”உன் மனைவி உன்பக்கத்தில இருக்காம எதுக்காக இன்னொருத்தர் பக்கத்தில நிக்கறா”

  

”யாரு ஓ மூர்த்தியை சொல்றீங்களா அவனும் என் மனைவிக்கு முறைப்பையன்தான்”

  

”அதுக்கு அங்க நிக்கனுமா”

  

”எங்க நின்னா உங்களுக்கு என்ன, எதுக்கு வந்தீங்க உங்க பொண்ணை கூட்டிக்கிட்டு போகதானே, தாராளமா கூட்டிட்டு கிளம்புங்க” என சொல்ல மகேந்திரன் வேங்கையனின் பேச்சில் ஏதோ ஒன்று மறைந்திருப்பதைக் கவனித்தார். அவர் உற்றுப் பார்ப்பதைப் புரிந்துக் கொண்ட வேங்கையனோ

  

”என்ன அப்படி பார்க்கறீங்க, எப்ப உங்க பொண்ணு உங்களைப் பார்த்து அப்பான்னு கூப்பிட்டாளோ அப்பவே எனக்கு விளங்கிடுச்சி, உங்களை கூட்டிட்டு வந்திருக்காரே வீரசிங்கம் அவர் என்னோட அப்பா, ஊருக்கு போறேன் வீட்டை பார்த்துக்க சொன்னாரு, வரும் போது உங்களை கையோட கூட்டிட்டு வந்திருக்கார்ன்னா அதுக்கு என்ன காரணமும் என்னால புரிஞ்சிக்க முடியுது

3 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.