பார்த்து பிடிச்சிருக்குன்னு சொன்னா மத்தப்படி ஒண்ணும் இல்லை, அவளை கூட்டிட்டுப் போய் திருஷ்டி கழிச்சி வேப்பிலை அடிங்க எல்லாம் சரியாயிடும்”
”வேப்பிலை அடிக்க வேண்டியது உனக்கு அவளுக்கு இல்லை”
”எனக்கா“
”ஆமாம் என் பொண்ணை பத்தி எனக்கு நல்லாவே தெரியும் அவள் முகத்தில உண்மையிருக்கு, அவள் அழுகையில உன் மேல அவள் வைச்சிருக்கற பாசம் தெரியுது, நீ மட்டும் இல்லைன்னா அவள் வாழ்க்கையை அழிச்சிக்குவா”
”யாரு அவளா எங்க அழிச்சிக்க சொல்லுங்க பார்க்கலாம்” என்றான் தெனாவெட்டாக அதைக்கேட்ட மகேந்திரன் தன் மகளிடம்
”இவன்தான் உனக்கு வேணுமா” என கேட்க அவளோ அழுதபடியே ஆம் என தலையாட்ட
”அப்ப இவனுக்காக நீ உன் உசுரை தருவியா” என கேட்க அதற்கும் ஆம் என தலையாட்டினாள்
”அப்ப கொடு” என சொல்ல அவள் வியந்தாள்
”அப்பா”
”சொன்னது காதுல விழலயா செத்துப் போன்னு சொல்றேன்”
”அப்பா” என்றாள் அதிர்ச்சியுடன்
”உன்னை இப்ப நான் கூட்டிட்டுப் போனாலும் இதோ இவனை நினைச்சிக்கிட்டு நீ வாழாம வருத்தப்பட்டு ஒரு நாள் சாவ, ஏற்கனவே உன் பேரு இங்க கெட்டுப் போச்சி, உன்னால என் மானமும் போயிடுச்சி, சரி நீ இவனை விரும்பிட்ட, போன மானத்தை காப்பாத்தனும்னா வேற வழியில்லை நீ இவனை கல்யாணம் செய்துக்கனும், ஆனா இவன் உன்னை