வரதேவையில்லை, அவள் வந்தா தேவையில்லாத அவமானம்தான் மிஞ்சும்”
”இல்லை அங்கிள் நான் வந்தா அவள்கூடதான் வருவேன்”
”ஏன் இப்படி அடம்பிடிக்கற”
”கண்டிப்பா என் தாத்தா சாகறப்ப கண்ணகிகிட்ட எதையாவது சொல்லிட்டுப் போயிருப்பாரு, அவளும் அதை நிறைவேத்ததான் பார்ப்பா அதனால மாதவியை நான் பிரிய வேண்டியிருக்கும், என்னால அவளை பிரிய முடியாது”
”வேணாம்பா இது சரியில்லை அவளை விட்டுடு உன் மனைவி கண்ணகிதான் அவள்கூட வாழறதுதான் உத்தமம்”
”எனக்கு நடந்த கல்யாணம் என் விருப்பத்தோட நடக்கலை அங்கிள், தாத்தாவோட ப்ளாக்மெயிலால நடந்தது, என்னால கண்ணகியோட வாழ முடியாது”
”இதைப் பத்தி பேசற நேரம் இது கிடையாது, நீ கண்ணகியோட வாழ்வியோ இல்லை மாதவியோட வாழ்வியோ அது அப்புறம், முதல்ல நீ வந்து உன் தாத்தாவோட காரியத்தை செய் வா” என அழைக்க அவனோ மாதவியின் கரம் பற்றினான் அவள் அதிர்ந்தாள்
”மாதவியும் என்னோடதான் வருவா” என தீர்மானமாகச் சொல்லிவிட உதயமூர்த்தி அதிர்ந்தார் மாதவியோ கோவலனிடம் கெஞ்சினாள்
ஆனால் அதை அவன் ஏற்கவில்லை, உதயமூர்த்திக்கும் வேறு வழிதெரியவில்லை வேண்டா வெறுப்பாக மாதவியை உடன் அழைத்துக் கொண்டு கோவலனுடன் ஆஸ்பிட்டல் விரைந்தார்.
அவர் செல்வதற்குள் அங்கு கண்ணகியோ மாணவர்களின் கூட்டத்தைக்கண்டு இதனால் மருத்துவமனைக்கும் மற்ற நோயாளிகளுக்கும் இடையூறு வரும் என நினைத்து தாத்தாவின் உடலை வீட்டிற்கு கொண்டு வந்திருந்தாள், அவளும் கோவலனுக்காகதான் காத்திருந்தாள், உதயமூர்த்தி முதலில் ஆஸ்பிட்டல் சென்று பார்த்துவிட்டு அடுத்து நேராக வீடு நோக்கி