(Reading time: 6 - 12 minutes)
Rojavai thalattum thendral
Rojavai thalattum thendral

அமைதியாக.

  

அது எல்லாம் சரி பட்டு வருமான்னு தெரியலை...” என வெற்றி சந்தேகமாக இழுக்க,

  

எல்லாம் வரும்ங்க... நாம இரண்டு பேரும் போகலாம். நிலாவுக்கும் கொஞ்சம் மனசுக்கு நல்ல மாதிரியா இருக்கும்... ஏன் நிலா?” மிருதுளா வெற்றியை பார்த்து சொல்லிவிட்டு, நிலாவிடம் கேள்வியாக முடித்தாள்.

  

மிருதுளாவின் கேள்விக்கு 'ஆம்' என தலை அசைத்த கிருத்திகாவின் பார்வை தானாக மீண்டும் தியாகுவிடம் சென்றது.

  

அவன் இப்போது தூரத்தில் எதையோ பார்த்தப் படி அமர்ந்திருந்தான். அவ்வப்போது இமைக்கும் இமைகள் மட்டும் இல்லை என்றால் தத்ரூபமாக செதுக்கப் பட்ட சிலை என்றே அவனை சொல்லி விடலாம்!

  

ன்ன தான் பிரச்சனை அவர்களுக்குள்???

  

அவன் அவளின் கணவன் என்பதே மற்றவர்கள் சொல்லி தான் அவளுக்கு தெரியும்!

  

திருமணமாகி இரண்டு வருடங்களுக்கு பின்பும் அவள் கன்னி பெண் என்பதும் இப்போது டாக்டரின் பேச்சின் மூலம் தெரிந்துக் கொண்டது தான்...

  

இரண்டு வருடங்களாக அவளின் வாழ்க்கையில் என்ன நடந்தது? எதற்காக யாரிடமும் சொல்லாமல் அவள் வீட்டை விட்டு கிளம்பினாள்?

  

தியாகுவின் அம்மா சொன்னது போல் சின்ன விஷயத்திற்கு கோபித்துக் கொண்டா வந்தாள்????

  

இத்தனை கேள்விகளுக்கும் குழப்பங்களுக்கும் இடையிலும், தியாகுவின் அந்த சலனமில்லாத முகமும் பார்வையும் கிருத்திகாவை எதுவோ செய்தது...!

  

முழு விபரம் புரியாவிட்டாலும், எதனாலோ அவன் தான் பிரச்சனையின் காரணகர்த்தா என்று

3 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.