(Reading time: 6 - 12 minutes)
Rojavai thalattum thendral
Rojavai thalattum thendral

தொடர்கதை - ரோஜாவை தாலாட்டும் தென்றல் - 08 - பிந்து வினோத்

  

This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.

  

ன் மனசுல ஆயிரம் குழப்பம் இருக்கும்! ஆனால் இந்த அம்மா சொல்றதை ஞாபகம் வச்சுக்கோ!, தியாகு போல உன் மேல அன்பு வச்சிருக்கவங்க யாருமில்லை... உன்மேல ரொம்ப அன்பு வச்சிருக்கார் அவர்,” என்றாள் சிவகாமி.

  

ஆமாம் கிருத்திகா, காதுல கேட்குற விஷயங்களை வச்சு அவனை தப்பா நினைச்சிடாதே...!” இது செவ்வந்தி.

  

தொடர்ந்து பெரியவர்கள் இருவரும் இதே போன்று பேச்சை தொடர்ந்தார்கள்!

  

அவர்கள் நிறுத்தினாலும், கீதா தன் பங்குக்கு தியாகுவை பற்றி புகழ்ந்தாள்.

  

அவர்கள் மூன்று பேரும் என்ன சொல்ல வருகிறார்கள் என்பது கிருத்திகாவிற்கு புரிந்தது. ஆனால் அதற்கு அவசியமே இல்லை என்பது அவளுக்கு மட்டும் தான் தெரியும்.

  

அவளுக்கு ‘அவளின்’ ராஜை தெரியும்.

  

அவன் விளக்கம் எதுவும் சொல்ல அவசியமில்லாமலே தெரியும்!

  

அவர்களின் திருமண வாழ்க்கைப் பற்றி அவள் கேள்விப்படும் விஷயங்களுக்கு ஏதாவது காரணம் இருக்க வேண்டும்...

  

எதை பற்றியும் விசாரிக்காமல் கேள்விப்படும் விஷயங்களை வைத்து ஒரு முடிவுக்கு வர அவள் விரும்பவில்லை.

  

வீட்டுக்கு போயிட்டு, நம்ம கோவில்ல வச்சு தியாகுவை திரும்ப தாலி கட்ட சொல்வோம்... உங்க வாழ்க்கையில நடந்த பழைய விஷயங்கள் பழசாகவே போகட்டும், இரண்டு பேரும் புதுசா வாழக்கையை ஆரம்பிங்க...” என்ற சிவகாமிக்கு பதிலாக அமைதியாக தலை அசைத்து வைத்தாள் அவள்...!

  

🌼🌸❀✿🌷

3 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.