“அண்ணாவை நீ ராஜ்ன்னு கூப்பிட்டு தான் பழக்கம்!”
“ராஜ்???”
“ஆமாம், அண்ணாவோட முழு பெயர் தியாகராஜன். சின்ன வயசுல பெரியம்மா ராஜான்னு கூப்பிடுவாங்க. ஆனால் தியாகுக்கு பிடிக்காது. அப்படி கூப்பிடவே கூடாதுன்னு சொல்லிட்டான்... அதனால எல்லோருக்குமே எப்போவும் தியாகு தான்! உனக்கு மட்டும் ஸ்பெஷலா ராஜ்!”
அவர்களின் பேச்சை கவனித்துக் கொண்டிருந்த மிருதுளா,
“அவருக்கு கீர்த்தி, இவங்களுக்கு ராஜ்! பேரெல்லாம் நல்லா தான் வைக்குறாங்க... மத்த விஷயம் மட்டும் தான் ஜீரோ போலருக்கு,” என்றாள் கேலி மின்ன.
“இருங்க, இருங்க... பொறுமையா அப்புறமா கிண்டல் செய்யலாம்...” என்று மிருதுளாவிடம் சொன்ன கிருத்திகா, கீதாவிடம்,
“அவரோட சின்ன வயசுல அப்படி கூப்பிடுவாங்கன்னு சொல்றீங்க... அப்போ, உங்களுக்கு அவரையும் அவர் குடும்பத்தையும் எங்க கல்யாணத்துக்கு முன்னாடியே தெரியுமா???” என ஆர்வம் மின்னக் கேட்டாள்.
“தியாகு எனக்கு தூரத்து சொந்தம் பிரின்சஸ். எங்க அம்மா பக்க சொந்தம்...”
“ஓ”
“அண்ணாக்கு உன் மேல லவ் அட் ஃபர்ஸ்ட் சைட்! “
“நிஜமாவா????”