(Reading time: 6 - 12 minutes)
Rojavai thalattum thendral
Rojavai thalattum thendral

கிருத்திகா கண்கள் விரித்து ஆர்வம் மின்ன கேட்ட விதத்தில் கீதாவிற்கும், மிருதுளாவிற்க்கும் சிரிப்பு வந்தது.

  

இப்படி எல்லாம் பார்த்தால் அவர் மயக்கம் போடாமல் வேறென்ன செய்வார்? என்றாள் மிருதுளா!

  

ஆமாம் மிருதுளா, தியாகு கல்யாணமே செய்துக்க போறதில்லைன்னு சொல்லிட்டு கழுத்துல ருத்திராட்ச மாலை எல்லாம் போட்டுட்டு சுத்திட்டு இருந்தான். பெரியம்மாவுக்கும் பெரியப்பாவுக்கும் அவன் எங்கே சாமியாரா போயிடுவானோன்னு ஒரே பயம். ஆனால் சாரோட ஆக்டிங் எல்லாம் நம்ம பிரின்சசை பார்க்குற வரைக்கும் தான். எங்க கல்யாணத்துல பிங்கும் இல்லாமல் பர்பிளும் இல்லாமல் வாடாமல்லி கலர்ல பட்டுப் புடவை கட்டிட்டு இவ அவர் முன்னாடி வந்தாளோ இல்லையோ, அவன் அந்த வினாடியே இவ காலடியிலே சரண்டர் ஆகிட்டான்...“

  

கீதா சொல்லி முடிக்க, மிருதுளா கேலியாக ஏதோ சொன்னாள்...

  

ஆனால் அது எதுவும் கிருத்திகாவின் காதில் விழவில்லை. அவள் கற்பனை குதிரையில் ஏறி, கீதா சொன்ன காட்சியை கண் முன் கொண்டு வர முயன்றுக் கொண்டிருந்தாள்.

  

அந்த காட்சியில் இப்போது போல் கற் சிலையாக இல்லாமல் அவளுடைய ராஜின் முகம் காதல் ரசத்துடன் பளபளத்தது...!

  

கிட்டத்தட்ட காலையில் அவள் மனதில் நிழலாக தோன்றிய காட்சியை போலவே அவன் முகத்தில் மெல்லிய உணர்வுகள் தெரிந்தது...

  

அவளுக்குள் மீண்டும் புதிய விதமான ரசாயன மாற்றங்கள் ஏற்பட்டது!

   

ண்ணம்மா...”

  

சிவகாமியின் அழைப்பில் கற்பனையில் இருந்து வெளியே வந்த கிருத்திகா,

3 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.