”இல்லை பரவாயில்லை”
”அம்மா தாயே மறுபடியும் மயங்கி விழுந்து வைக்கப் போற வாங்கி குடி”
”உங்களுக்கு”
“நான் ஆரோக்கியமாதான் இருக்கேன் நீ குடி ம்” என அதட்ட அதில் அவளும் அந்த ஜூஸையும் குடித்துவிட்டு தெளிவானாள். அவளின் முகம் தெளிவானதும் அமைதியாக பேசினான் கோவலன்
”கண்ணகி நீ ஏன் இப்படியாயிட்ட என்ன பிரச்சனை உனக்கு சொல்லு நான் தீர்த்து வைக்கதான் வந்தேன் கல்லூரியை சரியாக்கறது உன் பொறுப்பு”
”என்னால அங்க போக முடியாது”
”சிலம்பு இருக்கான் அதனால பயப்படறியா நான் உன்கூட வரேன்”
”சிலம்புவுக்கு உங்களோட காதல் விவகாரம் தெரியும் அவன் வெளி உலகத்துக்கு சொன்னா உங்க மானம் மரியாதை போயிடும்”
”போகட்டும்”
”என்ன”
”அட போகட்டும் என்ன இப்ப கல்யாணத்துக்கு முன்னாடி காதலிச்சேன், இப்ப என்ன என் காதலி என்கூடவா இருக்கா, அவள் எங்க இருக்காள்னே தெரியலை, இந்த காலத்தில காதல்ங்கறது ரொம்ப சகஜமான விசயமா மாறிடுச்சி, கள்ளக்காதல் ஒண்ணும் நான் செய்யலையே, அதுக்கு மாதவி இருக்கனும் அவள் இல்லை உன்கூடதானே இருக்கேன், அப்புறம் என்ன, சிலம்பு ஒரு ஆளுன்னு அவனை நினைச்சி நீ பயப்படற, நான் பார்த்துக்கிறேன்