(Reading time: 6 - 11 minutes)
Rojavai thalattum thendral
Rojavai thalattum thendral

அவளின் அருகே நின்றிருந்த ராஜ் இப்போது போலில்லாமல் புன்சிரிப்புடன் மலர்ந்த முகத்துடன் நின்றிருந்தான்.

  

சட்டென மணமகளிடம் இருந்த குறை அவளுக்குப் புரிந்தது... அந்த முகத்தில் சிரிப்பே இல்லை! கடனே என்று நிற்பது போல இருந்தது...

  

ஏன் இப்படி????”

  

தலையும் இல்லாமல் வாலும் இல்லாமல் கேள்வி கேட்டாள் அவள்.

  

முதல் முறையாக அவள் பக்கம் பார்த்த ராஜ்,

  

என்ன?” என்றான்.

  

இல்லை எல்லா போட்டோலேயும் இப்படி கேப் விட்டு நிக்குறாங்களேன்னு பார்த்தேன்...”

  

அந்த போட்டோவில் இருக்கும் கிருத்திகாவும் அவள் தான் என்று இன்னமும் அவளால் நம்ப முடியவில்லை! எனவே யாரோ ஒருத்தியை பற்றி பேசுவது போலவே பேசினாள் அவள்.

  

மீண்டும் அவள் பக்கம் உணர்ச்சி இல்லாத பார்வையை தந்தவன்,

  

அது அப்படி தான்,” என்றான் சாதாரணமாக!

  

ஆனால் அவள் பேச்சை எப்படியாவது தொடர்ந்தாக வேண்டுமே!!! அவசரமாக யோசித்து,

  

என் மேல உங்களுக்கு கோபமா?” என்றாள் கிருத்திகா.

  

எனக்கு ஏன் கோபம்???”

  

இந்த முறை அவள் பக்கம் பார்க்காமலே பதில் கேள்வி கேட்டான் அவன்.

3 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.