(Reading time: 6 - 11 minutes)
Rojavai thalattum thendral
Rojavai thalattum thendral

  

நான் சொல்லாம வீட்டை விட்டு வந்துட்டேன்... என்னால உங்க எல்லோருக்கும் மன உளைச்சல், அலைச்சல்... யாரா இருந்தாலும் கோபம் இருக்குமே... சாரி...”

  

நீ சாரி சொல்ல வேண்டிய அவசியமில்லை. தப்பு உன் பேருல இல்லை, என் மேல தான்...”

  

நீங்க ரொம்ப ஆசைப்பட்டு கல்யாணம் செய்துக்கிட்டீங்கன்னு சொன்னாங்க, அதனால பழியை உங்க பேருல போட்டுக்கிறீங்களோ?”

  

உன் கிட்ட யாரோ தப்பு தப்பா விபரம் சொல்லி இருக்காங்க...”

  

சரி, அப்போ நீங்க என்ன நடந்ததுன்னு சொல்லுங்க... மத்தவங்களை விட உங்களுக்கு தான் நல்லா தெரியும்...”

  

டாக்டர் பழைய விஷயங்கள் எல்லாமே உனக்கே தானா நினைவு திரும்பினால் தான் நல்லதுன்னு சொன்னார்...”

  

நான் எல்லாத்தையும் கேட்கலையே... நான் வீட்டை விட்டு வந்ததை பத்தி மட்டும் தான் கேட்டேன்.”

  

ப்ச்...

  

எனக்கு தெரியும் கட்டாயம் தப்பு என் பேருல தான்னு... நீங்க ரொம்ப நல்லவர்ன்னு எல்லோரும் சொன்னாங்க!”

  

இங்கே பார், யாரு உன் கிட்ட என்ன சொன்னாங்கன்னு நான் கேட்க போறதில்லை... ஆனால் ஒரு விஷயத்தை தெரிஞ்சுக்கோ... நீ வீட்டை வெளியே போனதுக்கு காரணம் நான் தான்...”

  

கிருத்திகா அமைதியாக அவனையே பார்த்திருந்தாள்.

  

3 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.