“நாம பெரிய மர்டர் மிஸ்டரி எல்லாம் எடுக்கனும்னு இல்லை சக்தி. சின்ன சின்ன கேஸ் எடுத்துப்போம். உனக்கும் பொழுது போகும்.”
“உன் இன்ஸ்பெக்டர்க்கு இது தெரியுமா?”
“இன்னும் சொல்லலை. உன் ஐடியான்னு சொல்லி எப்படியாவது அவரை தலை ஆட்ட வச்சிடுவேன்!”
“அதானே நீ யாரு! சத்யா ஆச்சே!!!”
“நீ சொல்லு சக்தி, உனக்கு இந்த ஐடியா பிடிச்சிருக்கா?”
“ப்ரைவேட் டிடக்டிவ்ன்னு இல்லாம ஜெனெரலா வைக்கலாம் சத்யா. நானும் தற்காப்பு கலை சின்ன பசங்களுக்கு சொல்லிக் கொடுக்கனும்னு யோசிச்சேன்!”
“அதையும் சேர்த்து செய்வோம். SS இன்வெஸ்டிகேட்டர்ஸ் & மார்ஷியல் ஆர்ட்ஸ். பேரு எப்படி இருக்கு?” சத்யா முகம் மலர்ந்து மின்ன கேட்டாள்!
“அருமை!!!”
“முதல் S நான். இரண்டாவது S தான் !நீ. நான் தான் உன் பாஸ். புரியுதா சக்தி?"
“ஹ்ம்ம்!!! நல்லா புரியுது!”
“யெஸ் பாஸ்ன்னு சொல்லி இப்போவே பழகு சக்தி!!!”
“யெஸ் பாஸ், சத்யா பாஸ்!!!!”
“குட்! குட்!!! என்னோட அஹல்யா கல்யாண மிஷன் முடிச்சாச்சு. அடுத்து சக்தி – சாந்த துரை மிஷன் ஸ்டார்ட் ஆகி இருக்கு!”