“சும்மா தான் அண்ணி... ரொம்ப போர் அடிக்குது உங்களை மீட் செய்ய வரவா?”
பாரதியின் முகத்தில் புன்னகை தோன்றியது.
“ம்ம்ம்... நான் இங்கே வந்து முழுசா ஒரு நாள் கூட ஆகலையே, அதுக்குள்ளே என்ன இவ்வளவு பில்ட் அப்???”
“விஷயம் இருக்கு அண்ணி...”
“ஹ்ம்ம்ஹும்... என்ன?”
“நீங்க வீட்டில தானே இருப்பீங்க?”
“ஈவ்னிங் வெளியே போனா போவோம் மது...”
“சரி, அப்போ நான் சீக்கிரமே வரேன்... வந்து நேராவே என்னன்னு சொல்றேன்...”
“ஓகே மது...”
அழைப்பை துண்டித்தப் பிறகு, என்ன விஷயமாக இருக்கும் என்று ஒன்றிரண்டு வினாடிகள் சிந்தித்த பாரதி அதற்கு மேல் அந்த கேள்விக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் மீண்டும் பழைய சிந்தனைக்கு சென்றாள்.
அப்போது பவித்ரா அந்த அறைக்குள் வந்தாள்!
“பாரு, என்ன பயங்கர யோசனையில இருக்க? விவேக் பத்தியா யோசிக்குற?”
“ஆமாம் பவி... அவரைப் பத்தி தான் யோசிச்சுட்டு இருந்தேன்... நீ ஈவ்னிங் ஃப்ரீன்னு தானே சொன்ன? நாம ஈவ்னிங் வெளியே போகனும்...”