ஷர்ட் போட்டிருந்தேன்னு உனக்கு ஞாபகம் இருக்கா?”
“ஹ்ம்ம்... க்ரீம் கலர் ஷர்ட்...”
“அதே தான்...!!!! எனக்கு என்னுடைய ஷர்ட் கலர் ஞாபகம் இல்லை, உனக்கு உன்னுடைய சாரீ ஞாபகம் இல்லை...”
“ரொம்பவே முக்கியமான ஆராய்ச்சி தான் இது!”
“ரொம்ப அலுத்துக்காத ரதி மேடம்... நான் சொல்ல வந்தது என்னன்னா இந்த விவேக் எது செய்தாலும் அதுக்கு பின்னாடி ஒரு காரணம் இருக்கும்...”
“அது தான் எனக்கு தெரியுமே! கல்யாணத்துக்கு முன்னாடி நடந்த ஒவ்வொரு மீட்டிங்குக்கும் ஒவ்வொரு கதை சொல்லி போர் அடிச்சீங்களே!”
“கல்யாணமாகி ஒரு மாசம் ஆகலை, அதுக்குள்ளே உனக்கு நான் பேசுறது போர் அடிக்குதா? அடிக்கும் அடிக்கும்... இந்த வேலை முடியட்டும், அப்புறமா உன்னை கவனிச்சுக்குறேன்...”
🌼🌸❀✿🌷
விவேக் சொன்ன வேலை முடியும் முன் அவனுக்கு தான் பாரதி அலுத்துப் போய் விட்டாள்! ஆனாலும், அன்றைய நாளின் நினைவில் பாரதிக்கு இப்போதும் உடல் சிலிர்த்தது... விவேக் எதையுமே ஏனோ தானோ என்று செய்பவன் இல்லை... அவன் சொன்னது போல் அவன் செய்யும் ஒவ்வொரு விஷயத்திற்கும் ஏதாவது காரணம் இருக்கும்...
அப்படி என்றால் இப்போது அவன் நடந்துக் கொள்வதற்கும் வேறு ஏதாவது காரணம் இருக்குமோ?
இருக்க தான் செய்யும்! அதைப் பற்றி அவனே அவளிடம் சொல்லவும் செய்தானே...
தனியாக இருந்தாலும், மறுப்பாக தலையை அசைத்தாள் பாரதி!