பாரதி!
“எல்லாம் உன்னுடைய சாரீயால வந்தது தான்...”
பாரதி சந்தேகத்துடன் அவள் கட்டி இருந்த சேலையை குனிந்துப் பார்த்தாள்.
“இதுல என்ன ஸ்பெஷல்? புதுசு கூட இல்லை.. இந்த கலர்ல என் கிட்ட நிறைய சாரீ இருக்கே...”
“இருக்கலாம்... ஆனால் இது தான் ஸ்பெஷல் ரதி...”
“ம்ம்ம்... அப்படியா???”
“நம்ம முதல் மீட்டிங் உனக்கு ஞாபகம் இருக்கா ரதி?”
பாரதியின் முகத்தில் பெரிய புன்னகை உதயமானது!
“அதை மறக்க முடியுமா விவேக்! வரலாற்று சிறப்பு மிக்கதாச்சே அந்த மீட்டிங்...”
“ஹேய், கிண்டல் செய்யாதே... நான் சீரியஸா சொல்றேன்... அன்னைக்கு இதே சாரீ தான் நீ கட்டி இருந்த...”
மீண்டும் சந்தேகமாக தன் சாரீயைப் பார்த்தாள் பாரதி!
“நிஜமாவா? எனக்கு ஞாபகம் இல்லையே...”
“அது தெரிஞ்ச விஷயம் தானே!”
பாரதி கோபமாக முறைக்கவும், விவேக் அவளை ரசனையுடன் பார்த்து புன்னகை புரிந்தான்!
“அது எப்படி உனக்கு இப்படி டக் டக்குன்னு கோபம் வருது! சரி, நான் அன்னைக்கு என்ன கலர்