கல்லு சிலை...!
ஆனாலும் உன்னை அப்படி எல்லாம் தப்பிக்க விட்டுற மாட்டேன் ராஜ்...
இந்த கீர்த்தியை பத்தி உங்களுக்கு தெரியலை. வெயிட் அண்ட் வாட்ச் மிஸ்டர் ஸ்டோன் ஸ்டாச்யூ!!!!
கல்லை வைத்து வரும் சினிமா பாட்டு இருக்கா??
கிருத்திகா மும்முரமாக யோசித்தாள்.
ஏன் இல்லை?
கல்லிலே கலை வண்ணம் கண்டான்...
ஹுஹும்...
கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா
கலையெல்லாம் கண்கள் சொல்லும் கலையாகுமா
இது ஓகே... ஆனால் இது ஹீரோ ஹீரோயினுக்கு பாடுற பாட்டு ஆச்சே!
சரி பரவாயில்லை, அட்ஜஸ்ட் செய்துப்போம்.
இந்த மிஸ்டர் ஸ்டோன் ஸ்டாச்யூ கண்ணு சொல்றது போல வேற என்ன இருக்கு...!
🌼🌸❀✿🌷
அதற்கு பிறகு, ஏர்போர்ட் வந்து சேரும் வரை தியாகு வாயே திறக்கவில்லை! கிருத்திகாவும் மும்முரமாக தன் 'ஸ்டோன் ரிசெர்ச்'சில் ஈடுப் பட்டிருந்ததால் பேசவில்லை...