(Reading time: 6 - 12 minutes)
Rojavai thalattum thendral
Rojavai thalattum thendral

  

ஆனால் தியாகு அவளை போக விடவில்லை.

  

நந்தியாக வழியின் நடுவே நின்றிருந்தான்!

  

கிருத்திகா கேள்வியாக அவனைப் பார்த்தாள்.

  

அவனோ அந்த போட்டோவில் பார்த்த அதே பார்வையுடன் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்...!

  

ன்ன மாதிரியான பார்வை இது...!

  

போட்டோவில் பார்த்திருந்தாலும் கூட அவனின் அந்த நேரடியான பார்வை தாக்குதல் கிருத்திகாவை என்னவோ செய்தது.

  

சில்லென்ற ஒருவிதமான உணர்வு அவளுக்குள் பரவியது... 

  

பிடித்திருந்தாலும், ஒருவிதமான கலக்கமும் அவளின் மனதில் தோன்றியது...!

  

வேலை செய்யாமல் அவளின் மூளை ஸ்ட்ரைக் செய்ய, என்ன செய்வது என்று புரியாமல் விழித்தப் படி நின்றிருந்தாள் அவள்...

  

தியாகு ரசனையுடன் இமைக்காமல் அவளையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தான்...

  

அடுத்தது என்ன என்ற எதிர்பார்ப்பும் கலவரமுமாய் அவள் நின்றிருந்தாள்...

  

தியாகு, வீட்டுல எக்ஸ்ட்ரா மளிகை பொருள் எல்லாம் எங்கே வச்சிருக்க?”

  

சமய சந்தர்ப்பம் தெரியாமல் அங்கே வந்து கீதா கேட்க, தியாகு கனவுலகில் இருந்து வெளியே வருபவனை போல சிறிய சிலிர்ப்புடன் சுயநினைவுக்கு வந்தான்.

3 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.