(Reading time: 6 - 12 minutes)
Rojavai thalattum thendral
Rojavai thalattum thendral

  

கிருத்திகா பக்கம் மீண்டும் ஒரு வினாடி பார்த்தவன், வேகமாக முகத்தை திருப்பிக் கொண்டு,

  

வா கீதா காட்டுறேன்... எல்லாம் ஸ்டோரேஜ் ரூம்ல தான் இருக்கும்... ஏதாவது வேணும்னாலும் போன் செய்து ஆர்டர் செய்திடலாம்...” என்றபடி நடந்தான்.

  

கீதாவும் தியாகுவும் நடந்துப் போவதையே தன்னை மறந்து பார்த்துக் கொண்டு நின்றாள் கிருத்திகா...

  

🌼🌸❀✿🌷

  

சில்லென்ற தீப்பொறி ஒன்று சிலு சிலு சிலுவென,
குளு குளு குளுவென
 சர சர சரவென,
பரவுது நெஞ்சில் பார்த்தாயா,
இதோ உன் காதலனென்று
 விறு விறு விறுவென,
கல கல கலவென
 அடி மனவிழிகளில்,
ஒரு நொடி நகருது கேட்டாயா,

  

அவர்கள் அனைவரும் பயணம் செய்துக் கொண்டிருந்த காரில் அந்த பாடல் சத்தமாக ஒலித்துக் கொண்டிருந்தது...

  

கிருத்திகாவிற்கு மீண்டும் தியாகுவின் 'அந்த போட்டோ' பார்வை நினைவில் வந்தது... சில்லென்ற தீப்பொறி தான் அது...!!!

  

என்ன ஒரு வசீகரிக்கும் பார்வை... சில்லென்ற உணர்வுடன், தீயாக தகிக்கும் உணர்வையும் கொடுத்தப் பார்வை!!!!

  

இந்த ராஜ் தானா ஒரு முழு நாளாக கற்சிலையாக நின்றவன்????

  

மனதில் ராஜ் பற்றி ஓடிய கேள்வியுடனே கிருத்திகா காரில் இருந்தவர்களை நோட்டமிட்டாள்...

3 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.