(Reading time: 6 - 12 minutes)
Rojavai thalattum thendral
Rojavai thalattum thendral

  

மனதுக்குள் மந்தகாசம் வர, ஒரு ஓரமாக நின்றிருந்த தியாகுவிடம் சென்றவள்,

  

நம்ம ரூம் எங்கே இருக்கு?” என்றாள்.

  

உன் ரூம் அந்த பக்கம் இருக்கு...” எனக் கையால் சுட்டிக் காட்டினான் அவன்.

  

உங்க ரூம்?”

  

அது எதுக்கு உனக்கு?”

  

என் ரூமுன்னு காட்டினீங்களே அந்த ரூம்ல இருக்கிறது எல்லாத்தையும் உங்க ரூமுக்கு ஷிஃப்ட் செய்து நம்ம ரூமா மாத்தனுமே அதுக்கு தான்...”

  

கீர்த்தி! இங்கே பாரு...”

  

நான் பார்க்கிறேன், பேசுறேன்... நீங்க தான் எதுவும் செய்ய மாட்டேங்குறீங்க ராஜ்...” என்றாள் கிருத்திகா கொஞ்சலாக!

  

சட்டென தியாகுவின் முகம் மாறியது...

  

ப்ளீஸ் கீர்த்தி, என்னை இப்படி டீஸ் செய்யாதே! அதோட விளைவுகள் மோசமானதா இருக்கும்...”

  

படப்பட என சொல்லிவிட்டு, அங்கிருந்து தப்பித்து செல்பவனைப் போல் வேக வேகமாக நடந்து சென்றான் அவன்.

  

என்ன இவன்...!

  

என்னை விட பெரிய புரியாத புதிராக இருப்பான் போலிருக்கிறதே!

3 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.