பேசின பிறகு தான் இது சீரியஸான விஷயம்னு புரிஞ்சது... உன் மனைவி ரொம்ப பாவம்... என்ன தான் உன்னுடைய பிரச்சனைன்னு புரியாமல் ரொம்பவே குழம்பிப் போய் இருக்காங்க... என்ன விஷயம்னு சொல்லு எப்படி சால்வ் செய்றதுன்னு யோசிப்போம்...”
“ப்ராப்ளமே இல்லைன்னு சொல்றேன்...”
அவனை பார்த்து முறைத்த லாவண்யா, அதன் பின் விவேக் அவளிடம் இருந்து தப்பிக்க கையாண்ட எல்லா விதமான முயற்சிகளையும் எளிதில் வெற்றிக் கொண்டு அசையாது உடும்பு பிடியோடு நின்றாள்.
“நீ என் கிட்ட பாரதியைப் பத்தி சொன்னதுல் நான் ஓரளவுக்கு அவங்களைப் பத்தி கற்பனை செய்து வச்சிருந்தேன்... இப்போ பாரதியை நேரா சந்திச்சதுக்குப் அப்புறம் எனக்கு அவங்களை ரொம்பவே பிடிச்சிருக்கு...! உன் கிட்ட பேசி என்னன்னு கண்டுப்பிடிச்சு சொல்றேன்னு அவங்களுக்கு ப்ராமிஸ் செய்திருக்கேன். நீ என்ன தான் ட்ரை செய்தாலும் உண்மையை தெரிஞ்சுக்காம இங்கே இருந்து நான் நகரதா இல்லை...”
அதன் பின்னும் பல நிமிடங்கள் விவேக்குடன் போராடி, இறுதியில் அவனை வற்புறுத்தி உண்மையை சொல்ல வைத்தாள் லாவண்யா!
“லாவி, இந்த உண்மையை நான் யார் கிட்டேயும் சொல்லலை... இப்போ உன் கிட்ட சொல்றது கூட, நீ பாரதிக்காக பேசுறதால தான்... எனக்கு ப்ரெயின் ட்யூமர்...”
விவேக் எந்த விதமான உணர்ச்சியும் இல்லாமல் ப்ளெயின் குரலில் அதை சொன்னான்... ஆனால் லாவண்யா தான் திகைத்துப் போனாள்!
“என்னடா விவேக் சொல்ற?”
“ம்ம்ம்... இரண்டு மாசம் முன்னாடி தான் எனக்கு தெரிஞ்சது... வேற ஒருத்தருக்கும் தெரியாது... இந்த விஷயம் தெரிஞ்சா பாரதி தாங்கிக்கவே மாட்டா...”