(Reading time: 28 - 56 minutes)
Poova? thalaiya?
Poova? thalaiya?

தொடர்கதை - பூவா? தலையா? - 14 - சசிரேகா

கோவலனை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்ற வெறியுடன் புறப்பட்டாள் கண்ணகி, எந்த வழியும் இல்லைதான் ஆனால் மனதில் நம்பிக்கையுடன் சென்றாள், எங்கிருந்து ஆரம்பிப்பது என பலமாக யோசித்தாள், மார்ச்சுவரியில் இருப்பது சிலம்பு இல்லை என்பதை நிரூபித்தாக வேண்டும், அதற்கு என்ன செய்யலாம் என யோசித்தவள் சட்டென உதயமூர்த்திக்கு போன் செய்து பேசினாள்

  

”கண்ணகி இங்க கோர்ட்ல தீர்ப்பு சொல்ற தூரம் வந்துட்டாங்க, தீர்ப்பு மட்டும் இன்னிக்கு ஜட்ஜ் எழுதியிருந்தா கோவலன் இந்நேரம் ஜெயில்ல இருப்பான்மா” என சொல்ல அவளோ அதிர்ந்தாள்

  

”அப்படியா அப்புறம் என்னாச்சி கோவலன் எங்கதான் இருக்காரு”

  

”பதட்டப்படாதம்மா, தீர்ப்பு எழுதற நேரத்தில நம்ம கல்லூரி மாணவர்கள் கோர்ட்டு வளாகத்தில வந்து ஒரே ஆர்ப்பாட்டம் செய்துட்டாங்க, அதுல தீர்ப்பை தள்ளிப் போட்டாங்க 3 நாள் அவகாசம் கொடுத்திருக்காங்க”

  

”நல்லது அந்த 3 நாள் அவகாசத்துக்குள்ள என் கணவன் நிரபராதின்னு நான் ஆதாரத்தோட வந்து நிரூபிப்பேன் சார்“

  

”மாதவி உன்னை தேடி ஊட்டிக்கு வந்துக்கிட்டு இருக்கா”

  

”சரி வரட்டும் எனக்கு உங்ககிட்ட இருந்து ஒரு உதவி வேணும்”

  

”சொல்லும்மா எந்த உதவியாயிருந்தாலும் நான் செய்ய தயாரா இருக்கேன்“

  

”ஒண்ணுமில்லை, எனக்கு இந்த சிலம்புவோட அப்பா அம்மா எங்க இருக்காங்கன்னு தெரியனும்” என சொல்ல அவரோ அதிர்ந்தார்

  

”எதுக்கும்மா இப்ப போய் அவங்களை பத்தி கேட்கற”

  

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.