“அங்க சிசி டிவி கேமரா இருந்ததா” என கேட்டதும் மாதவியின் முகம் மலர்ந்தது
”ஆஹா கண்ணகி நீ மகா புத்திசாலி வா வா இப்பவே ஹாஸ்டலுக்கு போறோம் சிசி கேமரால பதிவாகியிருக்கற விசயத்தை பார்க்கலாம் கிளம்பு” என சொல்ல கண்ணகியோ
”சாப்பிட்டு தெம்பா போகலாம், அதான் வழி கிடைச்சிடுச்சில்ல அப்புறம் என்ன வா” என சொல்ல மாதவியும் கண்ணகியும் வழி கிடைத்துவிட்ட மகிழ்ச்சியில் சந்தோஷமாக சாப்பிட்டு கிளம்பி நேராக மாதவி தங்கியிருந்த ஹாஸ்டலுக்குச் சென்றார்கள்.
அவர்கள் நினைத்தது போல சிசி கேமரா இருந்தது, அதைக்காண மாதவி அங்கிருந்த வார்டனிடம் அனுமதி கேட்டாள், கண்ணகியும் கைகூப்பி கெஞ்சினாள், அதில் அவர் மனம் இறங்கி வந்தார். சிசிகேமரா பதிவு செய்யும் அறைக்குச் சென்றார்கள் அனைவரும், அங்கு இருந்தவரிடம் கேட்டு சம்பந்தப்பட்ட நாளில் பதிவான பதிவுகளை காண்பிக்க சொல்ல அவனும் காண்பிக்கலானான்.
அதில் மாதவி சொன்னது போல ஒரு சிகப்பு நிற வண்டியில் வந்து இறங்கினான் சிலம்பு, அந்த காரின் நெம்பரை குறித்துக் கொண்டாள் கண்ணகி, சிலம்பு மாதவியிடம் தகராறு செய்வது கூட அந்த பதிவில் இருந்தது, அதுவரை பார்த்துவிட்ட கண்ணகி மாதவியுடன் வார்டனிடம் நன்றி கூறிவிட்டு வெளியேறி பங்களாவிற்கு வந்தாள்.
”நெம்பர் கிடைச்சிடுச்சி இதை வைச்சி என்ன செய்றது கண்ணகி”
”இந்த நெம்பர் யார் பேருல இருக்குன்னு தெரிஞ்சிக்கிட்டு அவங்க முகவரியில போய் பார்க்கலாம்” என சொல்ல அதற்கு அவளும் சரியென்றாள்.
அதற்காகவே அங்கு மேனேஜராக வேலை செய்த ஒருவரை பிடித்து அவரிடம் இந்த பொறுப்பை ஒப்படைத்தாள் கண்ணகி.
மேனேஜரும் சம்பந்தப்பட்ட ஆர்டிஓ ஆபிசுக்குச் சென்று கார் நெம்பரை சொல்லி அதன்