“வேண்டாம் விஜய், விளையாட்டுக்கு கூட அப்படி சொல்லாத! பாவம்டா, என்ன எதுன்னு ஒன்னும் புரியாம அவளுக்கு எவ்வளவு கொடுமையா இருக்கும்! கீர்த்தி எப்போதும் அழுத்தமானவ... அதான் இப்போவும் எதையும் வெளியே காட்டிகாம இருக்கா... ஆனால் யோசிச்சுப் பாரேன், பேரு, ஊரு எதுவும் தெரியாமல்... கல்யாணம் ஆச்சுன்னே இன்னொருத்தங்க சொல்லி தான் தெரியும்னா... ச்சே... யாருக்குமே இந்த அம்னீஷியா வரக் கூடாது!”
விஜய் பார்வையை திருப்பி தியாகராஜனை ஆராய்ச்சி செய்பவனைப் போல பார்த்தான்!
“உண்மையாவே தான் இதை சொல்றீயா மச்சான்?”
“இதுல கூடவா உனக்கு சந்தேகம்?”
“இல்ல... பிரின்சஸ் பத்தி எனக்கு நல்லாவே தெரியும்... என் முன்னாடியே எத்தனை தடவை உன்னை டீஸ் செய்திருக்கா, மரியாதை கொடுக்காமல் நடந்திருக்கா...”
“விஜய், இப்படி எதையாவது இப்போ கீர்த்தி கிட்ட சொன்னீயா?”
“இல்லையே... ஏன்?”
“இனிமேலும் சொல்லாதேடா... பாவம் கீர்த்தி...”
“ஹ்ம்ம்ம்...!!!”
“நீ சொன்ன பழைய விஷயம் எல்லாம் உன் தங்கை என் கிட்ட தோத்து போகாம இருக்க செஞ்ச டாக்டிக்...”
“என்னது????”
“க்ரிக்கெட்ல பக்காவா பவுல் செய்ற பவுலர் ஒருத்தர் எதிர் டீம்ல இருந்தா என்ன செய்வாங்க