(Reading time: 7 - 14 minutes)
Rojavai thalattum thendral
Rojavai thalattum thendral

போறா, நான் போறேன்...”

  

சொல்லி முடித்த அடுத்த வினாடி விஜய் அங்கிருந்து மாயமாக, சின்ன புன்முறுவலுடன் மீண்டும் கிருத்திகா பக்கம் பார்த்தான் தியாகராஜன்!

  

அவள் இப்போதும் அவனை தான் பார்த்துக் கொண்டிருந்தாள்... அவன் பார்ப்பதை கவனித்து விட்டு, மீண்டும் முகத்தை திருப்பிக் கொண்டாள்...

  

விஜய் சொல்வது போல் அவன் தெரிந்துக் கொள்ள வேண்டிய விஷயங்கள் நிறையவே இருக்கின்றன தான்...!

  

தியாகராஜனின் கண்கள் ஆசையுடன் கிருத்திகாவின் மீது படர்ந்தது...

  

🌼🌸❀✿🌷

   

மிருதுளா சொல்வதற்கு பொதுப்படையாக தலை அசைத்துக் கொண்டும், ‘ம்ம்’ போட்டுக் கொண்டும் இருந்த கிருத்திகா, மீண்டும் தியாகுவின் பக்கம் பார்த்தாள்...

  

மூன்றாவது முறையாக அவளின் ‘ஸ்டோன் ஸ்டேச்யூ’வும் அவள் பக்கம் பார்த்தான்... நாக்கை கடித்துக் கொண்டு அவசரமாக பார்வையை திருப்பிக் கொண்டவளுக்கு முன் தினம் முதல் இருக்கும் கேள்வியே இப்போதும் மனதினுள் இருந்தது...!

  

எங்கே போனா இந்த கீதா?? அவக் கிட்ட தண்ணி எடுத்துட்டு வர சொன்னதுக்கு நானே போய் குடிச்சிருந்திருக்கலாம்... நான் போய் தண்ணி குடிச்சிட்டு வரேன், இரு நிலா...”

  

மிருதுளா கிருத்திகாவிடம் சொல்லி விட்டு கீதாவை தேடி சென்றாள்.

  

மிருதுளா சென்றதும், கிருத்திகா மீண்டும் தியாகு நின்றிருந்த பக்கம் பார்த்தாள். சுவரில் சாய்ந்து நின்ற படி இப்போது ஏதோ யோசனையில் ஆழ்ந்திருந்தான் அவன்...

  

ஆறடி உயரத்தில் கம்பீரமாக தோன்றியவனை விழிகள் விரித்து இமைக்காமல் பார்த்திருந்தாள்

3 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.