“இங்கே வா... என் வைட் ஷர்ட்டை காணும்...”
“உங்களை தான் கூப்பிடுறார்... எதையோ காணுமாம்... போய் தேடி கண்டுப்பிடிச்சுக் கொடுங்க...” என்றாள் மிருதுளா கீதாவிடம் கேலியாக!
“மிருதுளா...”
கீதா எதுவோ சொல்ல தொடங்கிய நேரம்,
“கீத்ஸ்...” என்று விஜயின் குரல் பொறுமை இல்லாமல் மீண்டும் அழைத்தது...
“கூப்பிடுறார்ல... போங்க, போங்க... போய் விட்ட இடத்தில இருந்த கன்டினியூ செய்ங்க...”
மிருதுளாவின் கேலியில் மேலும் சிவந்த முகத்துடன், “வரேங்க...” என்றபடி சென்றாள் கீதா.
முகத்தில் சிரிப்பு மின்ன நின்றிருந்த மிருதுளா, கிருத்திகாவை பார்த்து,
“ஹேய் சின்ன பொண்ணே, நீ என்ன லுக் விட்டுட்டு இருக்க?” என்றாள்.
“யாரு, நானா சின்ன பொண்ணு??? நீங்க இரண்டுப் பேரும் என்ன பேசுறீங்கன்னு எனக்கு தெரியாதாக்கும்... அதை தெரிஞ்சுக்க தனியா காலேஜ் போகணும் பாருங்க!”
“அடிப் பாவி...”
“க்கும்... விஜய் அண்ணாவும், கீதா அண்ணியும் ரொம்ப சூப்பர் கபில்ல?”
“அப்போ நானும் உன் அண்ணாவும் என்ன?”
“நீங்களும் கூட ஓகே கப்பில் தான்...”