இரண்டு நாட்களில் எத்தனை எத்தனை விஷயங்கள் நடந்து விட்டன...!
இதை பற்றி பேசுவதில் மட்டும் கப்பலா கவிழ்ந்து விடப் போகிறது???
தியாகு அவனின் அறையில் லேப்டாப்பில் ஏதோ செய்துக் கொண்டிருந்தான். அவன் முன் சென்று நின்றவள், “உங்க கிட்ட பேசனும்...” என்றாள்.
விழிகளை மட்டும் உயர்த்தியவன்,
“நான் வேலை செஞ்சுட்டு இருக்கேன், அப்புறமா பேசலாம்...” என்றான்.
“இல்லை இது முக்கியமான விஷயம்...” என்றாள் அவள் பிடிவாதமாக.
“கீர்த்தி...!”
“இங்கே பாருங்க, நீங்களா என் கிட்ட எல்லாத்தையும் சொல்லி இருந்தா நான் ஏன் இப்படி வந்து வந்து தொல்லை செய்றேன்?”
லேப்டாப்பை மூடி வைத்து விட்டு, கைகளை மார்புக்கு குறுக்கே கட்டிக் கொண்டு அவளை பார்த்தவன், “சொல்லு, என்ன பேசனும்?” என்றான்.
“இந்த டைவர்ஸ் விஷயம்...”
“ம்ம்ம்ம்... சொல்லு...”
“அதுக்கு காரணம் இன்னொரு பொண்ணா?????”
தியாகராஜன் கிருத்திகாவை அமைதியாக ஒரு பார்வை பார்த்தான்...
கேள்வி கேட்கும் வரை மனதில் இருந்த பாரத்தை விட, கேட்டு முடித்து விட்டு அவனின்