“ஹோய் வாயாடி!”
“எனக்கு ஒன்னு சொல்லுங்க... வெற்றி அண்ணா உங்களைத் தவிர வேற பொண்ணை பார்த்து சைட் அடிச்சா என்ன செய்வீங்க???”
“ஹம்ம்ம்... பெருசா ஒண்ணுமில்லை... ஊருல கிச்சன்ல ஒரு பூரி கட்டை பார்த்திருக்கீயே, அதுக்கு வேற வேலையும் வரும்... அவ்வளவே தான்...”
“அண்ணாவை அடிப்பீங்களா???”
“அவர் சைட் அடிக்கலாம் நான் அடிக்க கூடாதா... என்னவோ ஊரு உலகத்துல நடக்காததை நான் சொலிட்ட மாதிரில ரியாக்ஷன் கொடுக்குற????”
“பாவம் வெற்றி அண்ணா... அப்பாவி!!!!”
“ஆமாம் உன் ராஜ் மட்டும் ரொம்ப பெரிய ரவுடி!!!! உன்னை பார்த்தாலே பாவமா முழிக்கிறார்...”
“முழிப்பார் முழிப்பார்...! அவர் கிட்ட ஒரு விஷயம் கேட்கனும், நான் பேசிட்டு வரேன்...”
“போ போ... எல்லோரும் என்ஜாய் செய்றீங்க நான் மட்டும் தனியா இருந்து புலம்ப வேண்டி இருக்கு...!”
“தனியா ஏன்??? அம்மா, அத்தை எல்லாம் அந்த பக்கம் இருக்காங்க... போய் அவங்களோட செட் போட்டுக்கோங்க... உங்களுக்கு நல்லா கம்பெனி கொடுப்பாங்க...”
கேலியாக மிருதுளாவிடம் சொல்லிவிட்டு தியாகுவை தேடி சென்றாள் கிருத்திகா...
மனதில் இருக்கும் கேள்வியை அவனிடம் நேராகவே கேட்டு விடுவது தான் சரி என்று அவளுக்கு தோன்றியது...